இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
படுக்கை சுகம்
அவன் : பொட்டு சுமந்த வளே—காதல்
பேச்சில் சிறந்த வளே !
ஒட்டும் முத்தம் தருவாய் ,
அவள் : களங்கம்
ஒழிந்த நிலா வாட்டும் !
அவன் : கட்டிக் கரும்பே உன்—உதடு
கற்கண்டுப் பால மடி
மொட்டு உன் பற்களடி ,
அவள் : மொட்டிடம்
வண்டுக்கு வேலை இல்லை !
அவன் : நீல விழி மாதே—பிரிந்தால்
நிழலும் சுடுதே யடீ
பாலின் கிண்ணமே வா ,
அவள் : அது , உப்பின்
பாத்திரம் சேர்ந் திடுமோ ?
அவன் : ஆட்டுத் தலை போலே—கொண்டை
அழகாய்ப் போட்ட வளே
தோட்டத்துப் பச்சிலை நீ ,
அவள் : அது, இலை
தைக்க உத வாதே !—
3.
25