பக்கம்:உதயம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருவெம்பாவை
(மாணிக்கவாசகர் அருளியது)
சத்தியை வியந்தது

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் 

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் (போய்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி 

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்கன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேயென்னே

ஈதேயெங் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.                      I

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்

பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே 

நேசமும் வைத்தனேயோ கேரிழையாய் நேரிழையீர்

சீசி இவையுஞ் சிலவோ விளையாடி 

ஏசும் இடமீதோ விண்ணுேர்கள் ஏத்துதற்குக்

கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் 

தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்.

ஈசனர்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாய்.                      2

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்

அத்தன னந்தன் அமுதனென் றள்ளுறித் 

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

பத்துடையீர் ஈசன் பழவடியிர் பாங்குடையீர் (தோ 

புத்தடியோம்புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லா

எத்தோநின் னன்புடைமை எல்லோ மறியோமோ 

சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனே

இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாய்.                  8:
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதயம்.pdf/20&oldid=1198360" இலிருந்து மீள்விக்கப்பட்டது