பக்கம்:உத்தரகாண்டம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    99


தம்புரை அவள் மீட்ட முடியாமல் தொந்தரவு செய்யவே “தாயம்மா, குழந்தையை மரத்தடிப் பக்கமோ தோட்டத்துக்கோ கொண்டு போய் விளையாட்டுக் காட்டு!” என்றார் அம்மா.

குழந்தை கையையும் காலையும் உதறிக் கொண்டு முரண்டு பிடித்தான். அவள் அவனைப் பற்றி வளாகத்தில் கொண்டு சென்றாள். பசு, கன்று, மற்ற பிள்ளைகளின் கொஞ்சல், எதுவுமே அவனை மாற்றவில்லை. அவள் பின்னாலிருந்த தங்கள் குடிலுக்குத் தூக்கிச் சென்றாள். கிணறு, துளசி மடம், மல்லிகைக் கொடி என்ற பசுமையான சூழல். பஞ்சமி அப்போது கடலூர் பக்கம் கிராம சேவிகாவாக இருந்தாள். பாப்பு வந்து வந்து போவான். சந்திரி எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்து, ஆஸ்பத்திரி பயிற்சிக்குச் சேர்ந்திருந்தாள். குருவிகளைக் காட்டிக் கொண்டு, அரிசி நொய்யை முற்றத்தில் இறைத்தாள்.

‘அய்யாவுக்கு இப்படிச் செஞ்சவுங்க யாரு தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டே பாப்பு நின்றான்.

மனதில் சந்தேகம் குத்திட அவள் விழித்துப் பார்த்தாள்.

“அவங்க ஸ்கூல்தா...”

அவள் திகைத்துப் போனாள்.

ஒன்பது, பத்து என்று தேறாமல் அரசியல் பேசிக் கொண்டு திரிந்தது அவள் உணர்வில் படிந்தது. அடுக்குத் தமிழ் பேச்சு, பாட்டு, நாடகம், சினிமா என்று பாதி நாட்கள் வீட்டுக்கே வருவதில்லை.

வந்தாலும், சோத்தைப் போடு என்ற அதட்டல்தான். சந்திரி டிரெயினிங் சேர்ந்த பிறகு வாரத்தில் ஒருநாள்தான் வருவாள். பஞ்சமியும் இல்லை. இவள் அநேகமாக சாப்பாட்டுக் கூடத்தில் இருப்பாள். இவன் ஒருத்தனுக்கு சில நாட்களில் அந்தச் சாப்பாடே கொண்டு வந்து வைத்திருப்பாள். வெறுமே தான் வாயிற்கதவைச் சாத்தியிருப்பாள். “இதென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/101&oldid=1049623" இலிருந்து மீள்விக்கப்பட்டது