பக்கம்:உத்தரகாண்டம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110   ✲   உத்தரகாண்டம்


ராதாம்மா ஒரு கைத்தறிச் சேலை அணிந்து, தாலிக்கொடியும் இரண்டு வளையல்களும் அணிந்து எப்போதும் போல் வந்தாள். அம்மா கதர்ச்சேலை; அவளும் வெள்ளைச் சேலை.

மணமகளின் தந்தைக்குத் தெய்வநம்பிக்கை அதிகமாம். முதல் நாளே குல தெய்வக்கோயிலில் குடும்பத்துடன் சென்று, சடங்கு செய்து திருமணம் முடித்துவிட்டார்களாம். மாலை வரவேற்பு, மிகப் பெரிய திருமணமண்டபத்தில் நடந்தது. அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், வண்ண விளக்கு ஜோடனைகள், என்று மிக ஆடம்பரமாக இருந்தது. அய்யா, தாமே பெரியவர் இராஜாஜியைப் போய்ப் பார்த்தாலும், புதிய கட்சியை ஏற்றுக் கொண்டு அரசியலில் நுழையவில்லை. விலகியது விலகியதுதான். இவர்களைத் தூக்கி சிம்மாசனத்தில் வைத்த பெரியவரின் கட்சி இருந்த இடம் தெரியாமல் போனதாகச் சொன்னார்கள்.

இவர்கள் கல்யாண வரவேற்புக்குச் சென்ற போது, அந்த அரசியல் கட்சித் தலைவராகிய முதல்வரே, அய்யாவை கைபிடித்து வரவேற்றார். போட்டோ பிடித்தார்கள். அம்மா இரண்டு வெண்கலக் குத்து விளக்குகளைப் பரிசாக அளித்தார். பெண்ணைப் பெற்றவள் நல்ல மாதிரியாக இவளிடம் வந்து பேசினாள்.

“அம்மா, எங்க பொண்ணு, கிராமத்துல வளந்தது. நாங்க ரொம்ப ஆசாரம். இங்கே எழும்பூரில் ஒரு வீடு வாங்கியிருக்கு. அதுலதான் ரெண்டு பேரையும் தனிக்குடும்பம் வைக்கிறதா யோசனை. நீங்க வந்து கூட இருந்து, அவளுக்கு நல்லது பொல்லாதது எதுவும் சொல்லிக் குடுக்கணும்...”

ராதாம்மாதான் சூழலைக் கலகலப்பாக்கிப் பேசிக் கொண்டிருந்தாள். “சம்பந்திம்மா, இவங்க நல்லது சொல்லிக் குடுப்பாங்க. பொல்லாதது நிச்சயமாச் சொல்லிக் குடுக்க மாட்டாங்க...” என்று சிரித்தாள்.

“ஒரு பேச்சு வழக்குத்தாம்மா சொன்னேன். இது நல்லது, இது சரியில்லன்னு பிரிச்சறியத் தெரியாத பொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/112&oldid=1049644" இலிருந்து மீள்விக்கப்பட்டது