பக்கம்:உத்தரகாண்டம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    129

கொண்டிருக்கையில் இன்னோர் அம்மா அங்கு வந்தாள்... “என்ன சம்பு? அப்பா ஒத்துப்பரா?” அம்மா திரும்பிப் பார்த்தாள். “உம்? அவர் செஞ்சது எதையும் நான் ஒத்துக்கல!”

துணி கொடுத்து காயத்துக்கு மருந்து போடுகையில் உள்ளிருந்து சமையல்காரர் போலிருக்கிறது, வந்தார்.

“சம்பும்மா, உங்கப்பா பாத்தா ரகளயாகப் போறதே?”

“ஓய், உம்மக்கேக்கல. இனிமே நீர் சமைக்க வரவேண்டாம். நாங்களே சமைச்சிக்கறோம்! சாப்புடறவா சாப்புடட்டும், இல்லாதவா போகட்டும்!” என்றார் கோபமாக

இவளுடைய கத்தலில், மொட்டைத் தலையில் ஒரு உச்சிக் குடுமியும் சந்தனக்குறுக்கும், விசிறி மட்டையுமாகப் பெரியவராகிய அவள் அப்பா கூடத்தில், நடை ஓரத்தில் வந்துவிட்டார்.

“அடி, சம்பு? நன்னாயிருக்கா? கேக்கறேன், வழிவழியா வேதத்யயனம் பண்ணின குடும்பம்டீ, இது?... ஏ, பற மூதேவி! போடி கொல்லப்பக்கம்? எங்கேந்து இங்க கொண்டு விட்டிருக்கான்? எல்லாம் இந்தத் தாமு குடுக்கிற எடம். போடி...!” விசிறிக் காம்புடன் ஓடி வந்த அவரைப் பார்த்து அம்மா சிரித்தார். அவள் மருண்டு ஓடிப்போக முடியாதபடி தன்னுடன் ஒட்டிக் கொண்டாள்.

“கிட்ட வராதீங்க. தீட்டு ஒட்டிக்கும். அப்பா, நீங்க என்ன பண்றேள், வாசப்பக்கம் ரூம்ல மடியா இருந்துக்குங்கோ. நாங்கதா சமைக்கப் போறோம். சமைச்சு சாப்பாட்டை, மடியா, ராகவனக் கொண்டு குடுக்கச் சொல்லுங்கோ!”

“பிராரப்தம்... ஏண்டி சம்பு இப்படி வதைக்கிற?”

“யாரப்பா உங்கள வதைக்கறா இப்ப?... அதான் தாமு, உங்க மாப்பிள, அவனவிட்டு இந்த வீட்ல இதெல்லாம் கூடாதுன்னு சொல்லச் சொல்லுங்கோ, நான் இவளையும் கூட்டிண்டு போயிடறேன்...”

உ.க.-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/131&oldid=1049813" இலிருந்து மீள்விக்கப்பட்டது