பக்கம்:உத்தரகாண்டம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   149

பெண்ணையும் வேறு கண் கொண்டு பார்த்ததில்லை. “என் கண்ணுத்தாயத் தவிர பாக்கிற பொம்புள எல்லாம், தெய்வம் எனக்கு, புள்ளாரு ஏன் கலியாணம் கட்டல? பாக்குற பொம்புள எல்லாம் பெத்த தாயாத் தெரியிறது தாயுன்னு சொன்னார். பொறுக்கிப் பயனுவ...” என்று குடிபோதையிலும் தன்னை வேறு பக்கம் இழுப்பவனை, பெண் சுகம் தேடி, எங்கெங்கோ நுழைபவர்களுடன் மோதிச் சண்டை இழுத்திருக்கிறான்... ஆனால், மகனிடம் அந்த நேர்மையே இல்லை.

இந்த ஒழுக்கச் சூழல் இல்லாமல் இருந்திருந்தால், அவள் புருசனும் ஒரு கால் பிசகி இருப்பானோ?... அவனுக்கு அவள் இந்தக் குடிலில் மீனும் கறியும் சமைத்ததில்லை. அவள் வளர்ந்ததும் பதம் பெற்றதும் மரக்கறி இல்லங்களிலும் சாத்துவீக மக்களிடமும்தாம். எனவே, அவள் கணவன் வேறு உணவு கொண்டாலும், வெளியே இருந்த உறமுறை வீடுகளில் தான் சாப்பிடுவானாக இருக்கும். அவளை அவன் சமைக்கச் சொன்னதில்லை. கடற்படையில் இருந்த ராதாம்மாவின் புருசன் எல்லாம் சாப்பிடுவார்; குடிப்பதும் உண்டு என்று சொல்லிக் கொள்வார்கள். அதையும் அவள் பையன்தான் சொல்லிக் காட்டினான்.

ஆனால், கட்டிய மனைவிக்குத் துரோகம் செய்வதென்பதை அவளால் சீரணம் செய்ய முடியவில்லை.

15

கனையும் மருமகளையும் குடித்தனம் வைக்கையில் சம்பந்தி அம்மாளும் பெண்ணைப் பெற்ற அப்பனும் அவளையும் அழைத்துச் சென்றுதான் எழுமூரில் புதிய வீட்டில் குடித்தனம் வைத்தார்கள்.

“எம்பொண்ணு ரஞ்சிதத்துக்கு டவுன் பழக்கம் எதும் தெரியாது. விவசாயக் குடும்பம்மா. உங்க மகன் பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/151&oldid=1049988" இலிருந்து மீள்விக்கப்பட்டது