பக்கம்:உத்தரகாண்டம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲   155

அவள் பழைய சோற்றில் உப்பையும் தயிரையும் சேர்த்துப் பிசைந்து தாளித்தாள்.

“எங்க வீட்டிலும் இப்படித்தான் அத்தை செய்வோம்! எங்கம்மா, இப்படித்தா எதுன்னாலும் கொதிக்க வச்சி, சுண்டவச்சிடுவாங்க. எங்கண்ணெ, அப்பா, சித்தப்பா, அத்தை எல்லாரும் சாப்பிடுவம். ஆனா, உங்க மக...”

“ஆமா, எங்க ஆகாசத்திலேந்து வந்திட்டானோ? எப்ப எந்திரிச்சி வரானோ? என்னமோ?...”

“அத்தே...’என்றவள் நிலத்தைப் பார்த்தாள்.

“ஏம்மா...’

“... ஒண்ணில்ல... நீங்க கறி மீனு ஒண்ணும் சமைக்க மாட்டீங்களா?”

‘கரண்ட்’ ஓடும் கம்பியைத் தொட்டுவிட்டாள்.

“ஏம்மா? உனக்குத் தெரியுமில்ல? சமைச்சிப்போடு!”

அவள் ஒன்னும் சொல்லவில்லை.

மாடு கொண்டு வந்து பால் கறக்க ஒருவன் வந்தான். ஃபிரிட்ஜ் வந்தது. கறி மீன் மசாலாப் பொருட்கள் எல்லாம் வாங்கித் தந்து வேலை செய்ய ஒரு பெண் வந்தாள். சுருட்டை சுருட்டையான முடியும் மூக்கும் முழியாகக்களையாக இருந்தாள்.

இவள் தனக்கு வேண்டிய கஞ்சியோ, குழம்போ வைத்துக் கொண்டு பின்பக்கம் தனியே தோட்டத்தைக் கொத்திக் கொண்டோ தண்ணீர் பாய்ச்சிக் கொண்டோ இருப்பாள்.

மரகதமும் ரஞ்சிதமும் சமையலறையில் பேசிக்கொண்டே, மீன் கழுவுவதோ, மசாலை அரைப்பதோ, வித்தாரமாகச் செய்வார்கள். அவன் எப்போது வந்தாலும் எதுவும் தயாராக இருந்தது. ஃபிரிட்ஜில் குடி வகைகள், குழம்பு, கறி எது வேண்டுமானாலும் இருந்தது. தோட்டத்தில் கீரை போட்டு, நன்றாக வளர்ந்திருந்தது. அப்போதுதான் கடலூர் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/157&oldid=1050001" இலிருந்து மீள்விக்கப்பட்டது