பக்கம்:உத்தரகாண்டம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218   ✲   உத்தரகாண்டம்

சுப்பய்யாவைப் பார்க்கிறான். என்னம்மா, சொல்லாம கொள்ளாம கதவப் பூட்டிட்டுப் போயிட்ட? காலம இல்ல, மத்தியானம் இல்ல, புள்ள வீட்டுக்குத் தான் போயிட்டியோன்னு போன் போட்டுப் பார்த்தேன், சரி வித்யாலயாவுக்குத்தான் போயிட்டியோ மனசுமாறின்னு விசரிச்சேன், அங்கும் இல்ல. எங்க போயிட்டு வரே! இவுரு யாரு?”

இவன் இப்போது எஜமானனாகிவிட்டான். வரீங்க, போறீங்ககூட இல்லை...

“இவுரு யாரு?”

“இவுரு, அந்தகாலத்து ஆளு. குருகுலத்துல வேலை செய்தவரு. பேரு சுப்பய்யா...”

சுப்பய்யா நிமிர்ந்து பார்க்கிறான்.

“வணக்கமுங்க. நீங்களே சொல்லுங்க. என்ன இந்த இடமெல்லாம் பொறுப்பா பாத்துக்க சேர்மன் அய்யா, வச்சிருக்காங்க. இப்படித்தா. சொல்லாம கொள்ளாம திடுதிடுன்னு போயிடறாங்க, வயிசாயிடுச்சி. மகன் கூப்பிடுறாங்க. அங்க போகணும். இல்லன்னா குருகுலம் பக்கமே அவுட் அவுஸ் தாரேன்னு கூப்பிடுறாங்க. அதுவும் மாட்டேன்னு இப்புடி நடக்குறாங்க. எனக்குத்தானேய்யா, பொல்லாப்பு? நீங்க எந்த டிரெயின்ல, எங்கேந்து வாரீங்க? எனக்கு ஒரு சேதி சொன்னா டேசனுக்கு வந்திருப்பேன்ல? தியாகி அய்யா சொந்தக்காரங்களா?” ரங்கனின் நிலை கொள்ளாத பரபரப்பு வெளிப்படுகிறது.

“அவங்களுக்கு ரொம்ப வேண்டியவன்தான். இப்பதா அவங்க யாரும் இல்லையே?”

“அது சரி. நீங்க எந்தூரிலேந்து வந்திருக்கிறீங்க?”

“புனா... ஒரு காரியமா வந்தேன். இந்தம்மாவை எதிர்பாராம கோயில்ல பார்த்தேன். அங்க இவங்கள ஒரு நாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/220&oldid=1050155" இலிருந்து மீள்விக்கப்பட்டது