பக்கம்:உத்தரகாண்டம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    247

வேண்டி அழைத்து வந்த இராமலிங்கம்... மணிக்கூண்டின் பக்கம் ஒரு கடை மாடியில் இருக்கிறார். அவர்தாம் சுப்பய்யாவுக்குச் செய்தி தெரிவித்தவர். மனைவியும் இறந்து, மகனும் வேற்று மதத்துக்காரியைத் திருமணம் செய்து கொண்டு போனபின் ஒற்றையாக, ‘சர்வோதயம்’ என்ற இயக்கத்தில் தன்னை ஆட்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவரைப் பார்க்கப் படி ஏறுகையில், கீழே வரிசையாக இருக்கும் கடைகளில் ஒன்றான ‘பேக்கரி’யின் ஆள், “யாரம்மா? மேலே எங்கே போறீங்க?” என்று கேட்கிறான்.

“ராமலிங்கம்னு வழுக்கைத் தலை; உயரமா, முன்ன வங்கில இருந்தாங்க...”

“அவுரு இப்ப இங்க இல்லம்மா. ரூமைக் காலி செய்திட்டுப் போயிட்டாங்க!”

‘போன மாசம் பாத்தேனே?”

“ஆமாம்மா, அவுரு சொந்த ஊருக்குப் போயிட்டாரு. இப்ப அந்த ரூமெல்லாம், ‘பிரைட்’ ஓட்டல்காரரு எடுத்திருக்காரு...”

சுப்பய்யா துரும்பு என்றான், துரும்பும் நழுவிவிட்டதா? மனது சோகமாக இருக்கிறது.

திடீரென்று ஏன் போனார்? செய்யாத குற்றத்தைப் போட்டு ஒரு ஏழைப்பையனுக்குக் கடுங்காவல் தண்டனை கொடுத்ததை எதிர்த்துக் கேட்கச் சொன்னாரே, அதற்காக அவரையும் வெருட்டினார்களா? இந்த இடம் வேண்டாம் என்று போய்விட்டாரா?

அவள் மடியில் பணத்துடன் உச்சி வேளை கடந்து விடுவிடென்று வீடு திரும்புகையில், உள்ளே ஆளரவம் கேட்கிறது. வாயில் வராந்தா கம்பிக் கதவு உள் பக்கம் பூட்டியிருக்கிறது. சுற்றிக் கொண்டு அவள் பின்புறம் செல்கிறாள். இரண்டு மூன்று ஆட்கள் வந்திருக்கின்றனர். பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/249&oldid=1050253" இலிருந்து மீள்விக்கப்பட்டது