பக்கம்:உத்தரகாண்டம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    263

தான் அப்பா ‘அட்டாக்’ வந்து செத்துப் போன தகவல் வந்தது. சித்திக்கு நான் கிரண் மேல் குற்றம் சாட்டியது பிடிக்கல. எல்லாம் சரியாயிடும். உங்கப்பா, ஒண்னுமில்லாம வீட்டில வச்சிண்டே குடிச்சார். ஒரு அட்டாக் வந்தப்புறம் நானும் எப்படி எப்படியோ வழிக்குக் கொண்டு வந்தேன். இந்தக் காலத்தில் காந்தி சமாசாரம் எதுவும் செல்லு படியாகாது. நிவீணா உன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக்காதே. சர்வீஸ்ல இருக்கறதுன்னா இப்படி இருக்கத்தான் இருக்கும்...”

“ஆனால், என்னால சகிச்சிக்க முடியல. ஒரு நாள் கண்டபடி திட்டிட்டு, ‘நீ சத்தியத்தை மீறுறவன். எனக்குப் புருசனும், என் குழந்தைக்கு அப்பாவும் வேண்டாம்னு கிளம்பிட்டேன். நாக்பூருக்குப் போனேன். மாமாவின் உபதேசம் பிடிக்கல. அப்ப பவனாரில் வினோபா இருக்கிறார். அங்கே போய் ஒரு மாசம் இருந்தேன். பிரஸ்ஸில் வேலை செய்தேன். பஜாஜின் மனைவி, பெரியம்மா இருந்தார். பிரார்த்தனை, கூட்டு யோகம்... எதிலும் மனசு ஈடுபடல... அங்கேருந்து தான் ராம்ஜியின் குருகுலத்துக்கு வந்தேன்...”

அவள் எங்கோ பார்க்கிறாள்.

“ ‘இன்னும் ஒரே ஒரு தடவை எனக்கு சந்தர்ப்பம் குடு அநு, ஒரே ஒரு தடவை!’ன்னு கெஞ்சினார், நாக்பூர் வந்து. நான் கேட்கல தாயம்மா, கேட்கல... ‘சந்நியாசி’ சித்தப்பாக்கு நான் கடைசி காலத்துக்கு ஒரு கால் கட்டா இருந்தேன் காங்டா குருகுலத்தில் நான் டீச்சராகச் சேர்ந்தேன். இதுவும் படிச்சது... அதுக்கப்புறம்...”

“அம்மாஜி, கஸ்தூரி வீட்டுக்குப் போறேன்றா...!” நிமிர்ந்து பார்க்கிறாள்.

“ஓ... மணி ஆறரை ஆயிட்டுதா? மணி ஆனதே தெரியல... தாயம்மா, உங்களுக்கு இன்னிக்குப் போகனுமா? இங்கே இருங்களேன்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/265&oldid=1050297" இலிருந்து மீள்விக்கப்பட்டது