பக்கம்:உத்தரகாண்டம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266   ✲   உத்தரகாண்டம்

போயிட்டாங்க. நிசா, படிச்சிட்டு, ‘நியூதியேட்டர்’னு, கிராமங்களிலெல்லாம் ‘அவேர்னெஸ்’ கொண்டாரத்துக்காக தெருவோர நாடகம் எல்லாம் நடத்திட்டிருந்திச்சி. அதில ஒரு பிஹாரி பையன்... அவனுக்கும் இதுக்கும் லவ்னு சொன்னாங்க. ஆனா, கல்யாணம் பண்ணல. ஒருநா, பிஹார்லதா, தாகூர் ஆளுங்க நாடகம் நடக்கிறபோதே குத்திட்டாங்க. அநு... டெல்லிலதா இருக்கா... எங்க அங்கில் பாத்து, பென்சன், அது இதுன்னு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டிருக்காங்க. அப்ப இந்த ஷாக்..” இது நடப்பா, கனவா, எங்கே என்று புரியாது அதிர்ச்சியால் அவளுக்கும் கால்கள் இயங்காமல் உறைகின்றன. சில விநாடிகளில் சமாளிக்கிறாள்... முருகா...!

ரெண்டு புள்ளிங்க...

“அநு, அநு, வளர்ப்புக்கு எடுத்திட்ட பிள்ளைங்க. தீவிரவாதிங்களால அப்பா அம்மாவைப் பறி கொடுத்தப் பச்சைப் பிள்ளைங்க. பஞ்சாபில ஒரு ஸ்தாபனத்து மூலமா இவ வளக்க எடுத்துக்கிட்ட பிள்ளைகள். அநுவும் நிசாவின், அவ லவர் பையன் சுதாகர் எல்லாரும் சேர்ந்து தான் எடுத்திட்டாங்க...”

எதுவும் பேசத் தோன்றவில்லை.

“மாதாஜி, நீங்க வந்திருந்தால் ஆறுதலாக இருக்கும். இப்பவும், நிசா, அந்த அதிர்ச்சிலேந்து மீளல. பீஹாரிங்க, இதையும் தீவிரவாதின்னு, முத்திரை குத்தி அரெஸ்ட் பண்ணிருப்பாங்க. ஆனா, நல்ல வேளையா, அதெல்லாம் நடக்காதபடி, வேற ஸ்தபானங்கள், சுதாகர் கொலைக்காகக் கண்டனம் செய்த இயக்கங்கள் பாதுகாத்திருக்கு. நிக்கலஸ் சாபுக்குத் தெரியும். நிசாவின் குழந்தைகள்னு சொல்லும். புருசன் இறந்திட்டார்னு, சொல்லும். இந்தப் பக்கம் ஒதுக்குப்புறமா இருக்குன்னாலும், நிசா இப்பகூட ஒரு’என்.ஜி.ஒ.’ இயக்கத்துல இருக்கு. இங்க இன்னும் பழகல. நேத்துத்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/268&oldid=1050304" இலிருந்து மீள்விக்கப்பட்டது