பக்கம்:உத்தரகாண்டம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282   ✲   உத்தரகாண்டம்

டாங்க...” சாப்பாடு கொடுத்து முடித்துத் துடைத்து விடுகிறாள். குளியலறைக்குக் கூட்டிப் போகிறாள்.

அப்போது கதவைத் திறக்கும் ஓசை கேட்கிறது.

அறைக்குள் அசுவினி-டாக்டர் பெண் வந்திருக்கிறாள்.

“எப்படி இருக்கிறீங்க பாட்டியம்மா ?”

“...வாம்மா, நீ நல்லா இருக்கணும். நீ சொன்னாப்புல எனக்கு ஒண்ணில்ல. மொதல்ல, எனக்கு என்னோட வெள்ள சீல ரவிக்கை வோணும்மா. நேத்து, இன்று முழுக்கத் தூங்கி இருக்கிற. குளிக்காம, கழுவாம, நா இப்பிடி சோறு தின்னதில்ல... என்ன மாத்திர குடுத்தியோம்மா, தூங்கி, பசி... சோறு... பாவச்சோறுன்னு நெனப்பே. ஆனா... ஒங்க அன்பு எனக்குப் புதிசா இருக்கு. யாரு பெத்த பொண்ணுகளோ, நீங்க நல்லா இருக்கணும். என்சீல ஒண்ணும் எடுத்துக்காம, இத்த மாட்டி... கண்ணு, எனக்கு சீல கொண்டாந்து குடுத்திரு. நல்லாப் போச்சி. நான் பாட்டுக்கு என் வழில போயிடறேன்...”

“சேலைதானே? நிச்சயமா தாரேன். இப்ப, நீங்க நடந்து போக முடியுமான்னு பாத்து சொல்லுறேன்... படுங்க...”

“கன்னியம்மா, இதெல்லாம் எடுத்திட்டுப் போ...”

அவள் குழாய் வைத்து இவளைப் பரிசோதிக்கிறாள்.

பிறகு கதவைத் தாழிட்டுவிட்டு உட்காருகிறாள். அவள் கையைத் தன் கையில் வைத்துக் கொள்கிறாள்.

“உங்களுக்கு இங்கே இருக்கப் பிடிக்கலியா?”

“வாணாம்மா. எங்கியோ பாடி பரதேசி மாதிரி இருக்கிற சுகம் இதுல இல்ல. நீ யாரோட மகன்னு, எனக்குத் தெரியல. மகன், மகள், உறவு, சொத்து சுகம் எல்லாம் பாவமலை மேலே நிக்கிறதுன்னு மனச்சாட்சி குத்துது. அதுனாலே தான் எல்லாம் துறந்தேன். நான் அண்டிய இடம் சத்தியம் குடியிருந்த கோயில். இப்ப அங்க, ஆசுபத்திரி கட்டுறாங்களாம்; ‘லாட்ஜ்’ கட்டுறாங்களாம். என்னப் போ போன்னு வெரட்டினாங்க- ரா முச்சூடும் தூக்கமில்ல. எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/284&oldid=1050364" இலிருந்து மீள்விக்கப்பட்டது