பக்கம்:உத்தரகாண்டம்.pdf/319

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராஜம்கிருஷ்ணன்   ✲    317
 

ஒராம்புள, ஊத்தங்கரை மேச்சாதிப் பொண்ணக் கூட்டிட்டுப் பஸ்ஸிலே போயிட்டான். பஸ்ஸ மறிச்சிப் போட்டு, ஊத்தக்கர ஆளுவ அவங்க ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டானுவ. தடுக்க வந்தவங்களுக்கெல்லாம் அடி, உதை, பஸ் டிரைவரும் கண்டக்டரும் ஓடிட்டாங்க. ஓடனே அடுத்த நாள், அழகாபுரி ஆளுங்க ராவே புகுந்து ஊத்தங்கரையில அந்த தெருவையே எரிச்சாங்க... போலீசு, நாங்க என்ன செய்ய முடியும்? அழகாபுரில ஒரு தெருவே கைது பண்ணிருக்கிறோம். ஊத்தங்கரைக்காரங்களும்தான்... காபி குடிச்சிக்குங்க... வாங்க...” அவள் அந்தக் காபியை அருந்துகிறாள். பிறகு அவனே அவள் கையைப் பற்றி அழைத்து வருகிறான். வாய்க்காலில் அங்கங்கே முட்செடிகளும், புல்லும் பரவிக்கிடக்கிறது. அதைக் கடந்து அங்கே தெருவுக்குள் நுழைகிறார்கள். எல்லாம் மச்சு வீடுகள்; ஒன்றிரண்டு மாடி வீடுகளாக மாறி இருக்கின்றன. அதைக் கடந்து ஒற்றையாக அரசு கட்டிக் கொடுத்த வீடுகள் ஏழெட்டு தெரிகின்றன. ஒரு வீட்டில் இருந்து யாரோ குழந்தை எட்டிப் பார்த்து விட்டு உள்ளே ஓடுகிறது. ஒரு வீட்டுக்குள் அவளை அவன் அழைத்துச் செல்கிறான். செருப்பில்லாமலே நடந்து பழகிய அவளுக்குக் கால்களில் முள் தைத்தால் வலித்ததில்லை.

குடிசைகளாக இருந்த அழகாபுரி, மச்சு வீடுகளாக இருக்கின்றன. டி.வி. சாதனத்துக்கான உச்சிக் கொடிகள் இருக்கின்றன. உள்ளே... தரையில், பாய்களிலும் கந்தய் சேலைகளிலும் வெட்டுப்பட்டும் குத்துப்பட்டும், தீக்காயப்பட்டும், உடல்கள், சின்ன அறையில் நான்கு பேர். பாதி உயிர் போகும்- போன நிலையில் ஒரு கிழவனுக்கு மூச்சு வாங்குகிறது. ஒரு பிஞ்சுக் குழந்தை. காய்ச்சல் கொதிக்கக் கண் மூடித் துவண்டிருக்கிறது. அதன் தாய், மண்டையில் அடிபட்டுக் கிடக்கிறாள். ஏதோ ஓர் அழுக்குத் துணி இரத்தக்கறையுடன் முடியோடு ஒட்டிக்கிடக்கிறது. பதினைந்து பதினாறு வயசுப் பிள்ளை ஒருவன் கால் ஒடிந்த