பக்கம்:உத்தரகாண்டம்.pdf/329

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராஜம்கிருஷ்ணன்   ✲    327
 

வெள்ளில கண் மலர்தாம் போடுவாங்க. சுத்தி நந்த வனமா இருந்திச்சி. வாய்க்கால்கரை பூர அடுக்கரளி பூத்திருக்கும் கலர்கலரா, வள்ளை ரோசு, சேப்புன்னு. இப்ப இருக்கா?”

“இல்லீங்கையா...”

“ஊத்தங்கரக்காரர் தா இப்ப கோயில் நிர்வாகம் முழுசும். கறுப்பு துட்டு சேத்தவனெல்லாம், அம்மனுக்கு திருவாசி, அது இதுன்னு வெள்ளிதங்கம் போட்டாங்க. திருவிழாவுக்கு எங்கேந்தோ, ரிகார்ட் டான்ஸ் போல பொம்புளகளக் கூட்டி வந்தாங்க. சாராயம் சண்டைன்னு ஆயி ஒரு வருசம் வெட்டு குத்துல திருவிழாவே நடக்கல. சின்ன காம்பவுண்ட பெரிசாக்கி பெரிய கதவு போட்டுட்டுப் பூட்டிட்டாங்க. நம்ம தெரு கோயில் விசயத்தில் எதுவும் காதுல போட்டுக்கிறதில்ல. இங்கே நாலாவது வூடு... மின்ன, உங்களுக்குத் தெரியாது, நம்ம ஒறவுதா. உம் புருசனுக்குக் கூட சொந்தம் உண்டு. அவங்கல்லாம் அப்பவே ஊரை வுட்டுப் போயி, பூட்டியே கெடந்திச்சி. அத்த வெலக்கி வாங்கிட்டு, இப்ப கூட குடை-ஆன்டெனா இருக்கும். கேபிள் டி.வி வச்சான். அவன்தான் எதே ஒரு கழகக்கட்சி. இப்ப எதுன்னு தெரியாது. ஒருநா ராவுல புள்ளாரப் பேத்து, வாய்க்காக்கரை மரத்தடில வச்சிட்டானுவ. உண்டிப் பொட்டி உடச்சிருக்கு. டாய், டூய்னு சண்ட நாறிச்சி. கோர்ட்டு கேசுன்னு போனானுவ. முன்ன, அழகாபுரத்து ஆளுதா, வள்ளுவகுலம், நல்லபையன், தமிழ் படிச்சவன், அவந்தா தமிழ்ல பூசை பண்ணுவா. அவனை வேணான்னு பழிபோட்டுட்டு, மல்லிகா புரத்திலேந்து ஒரு அய்யர் பய்யனைக் கொண்டாந்து வச்சாங்க. அவன் சைக்கிள்ள வந்து, அங்கியே ஒரு பொங்கலப் பொங்கி, பூசை பண்ணுவான்னு சொன்னாங்க. இப்ப, அந்த திருட்டுக் கல்யாணத்துக்கு அவன் உடந்தை. துபாய்ப் பையன் துலுக்கனாயிட்டான். அவனை இந்த அய்யர் பையன், ஒரு ஸ்கூல்ல படிச்ச சிநேகம்னு ஒரு பட்டாச யாரோ கொளுத்திப் போட,