பக்கம்:உத்தரகாண்டம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60   ✲   உத்தரகாண்டம்

மில்ல. சாமி மட்டுமில்ல. எத்தினியோ கட்சிங்களும் சனங்களக் கூறுபோட்டுக் கிட்டிருக்கு சின்னக்கா...”

கீழ்த்தஞ்சையின் ஆற்றுப்பாசனத்தில் வேலி வேலியாக நிலம். அந்தப் பெரிய வீட்டில் ராசம்மா கல்யாணம் கட்டி வந்தது அவளுக்குத் தெரியும். இந்த அய்யாவும், ராசம்மா மாமனாரும் சம வயதுக்காரர்கள். அவருடைய அண்ணன் மூத்தார் ஒருத்தரைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள். அன்னிபெசன்ட் அம்மை அவர்கள் ஊரில் வந்து தங்க, அவர் கிராமத்தில் அழகாக ஒரு கட்டிடம் கட்டினாராம். தாயம்மாளும் அதைப் பார்த்திருக்கிறாள்...

ராசம்மாவின் புருசன் அந்தக் கலத்தில் காசியில் படிக்கப் போனான். நெடுநெடு என்று உயரம். நல்ல சிவப்பு. சுருட்டை சுருட்டையான முடி. படிப்பை முடிக்கு முன்பே இவர்களின் அஹிம்சைக்கு மாற்றான புரட்சி ஆயுதம் என்ற கிளைக்குத் தாவினான். துப்பாக்கியை எடுத்துக் கொண்டு புலியூர் மிராசைச் சுட்டான். மூட்டை மூட்டையாக நொய் - அரிசி எல்லாம் குடிபடைகளுக்கு அளந்துவிட்டான். போலீசின் கண்களுக்குப் படாமல் ஓடி ஒளிந்து, கடைசியில் பிடிபட்டான். அரசுத் துரோகக் குற்றம் சாட்டி, அவனுக்குத் தண்டனை விதிக்குமுன், அவனுக்குத் தூக்குத் தண்டனை வந்து விடுமோ என்று அஞ்சி, பெற்றவர்கள், அவனுக்கு மூளை சரியில்லை என்று பொய்யாக ஒரு ‘டாக்டர் சர்ட்டிபிகேட்’ காட்டி, அவனுக்கு ஆயுள் தண்டனைக்கு மாற்றாக, பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லச் செய்தார்கள்...

ராசம்மா... பட்டணத்துக்கு, மாமன் மாமியுடன் வரும் போதெல்லாம் அவர்கள் வீட்டில்தான் தங்குவார்கள். ராதாம்மாவுக்கு ஏழெட்டு வயசிருக்கும். கீழ்ப்பாக்கத்து ஆஸ்பத்திரியில் இருந்து, ஓரிரவு அழைத்து வந்து, ஊருக்குக் கூட்டிச் சென்றார்கள்...

அதற்குப் பிறகு இவள் ஐந்து பேறு பெற்றிருக்கிறாள். ஆனால், பையன் குடிகாரனானதும், தாயாதி பங்காளிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/62&oldid=1049487" இலிருந்து மீள்விக்கப்பட்டது