பக்கம்:உத்திராயணம்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

贾爵翰 லா, ச. ராமாமிருதம்

மூத்ததுக்கு முன்னால் வழியைப் பாருங்கோ!'

தண்டவாளம் பின்னிக்கற மாதிரி அக்காவுக்குச் சில சமயங்கள் கண் க்ராஸ் ஆயிடும், ஏதேனும் யோசனையா இருந்தாலோ, பார்வை ஒரு இடத்தில் நிலைச்சுப் போனாலோ. வளலந்தீ! வலந்தீ!" உரக்க அழைச்சு முகத் தெதிரே, சன்டிகேசுவரர் சன்னிதி மாதிரி விரலைச் சுண்டிக் கலைச்சாகனும், சிமிட்டி தரை வெடிச்சாப்போல, முகத் தில் வேறே பரு வத்து வந்து, போய் போய் வந்து வந்து... இப்போ கொஞ்ச நாளா பல் வேறே எதோ தகறாறு பண்றது. நல்ல நாளுலேயே பல் மறைய வாயை மூட முடியறதில்லே. நான் அவளைக் கேலி பண்ணல்லே. பாவம்னு பரிதபிக்கவே மனசு கஷ்டப்படறது.

அன்னிக்கு அவள் மேலேயே காப்பியைக் கொட்டி னாலும் அக்காவுக்கு என் மேலே உசிர்தான். எனக்குப் பின்னிக் குளிப்பாட்டி, மூக்கைச் சிந்தி, பள்ளிக்கூடத்துக்கு உடுத்தி, என் ஹோம் ஒர்க்கைத் தான் எழுதிக்கொடுத்துஅக்கா எனக்குப் பிரியம் காட்டக் காட்ட என் ஆசைகளிலும் அசடு வழியும். திடீர்னு ஒரு ஏணை கட்டி என்னை அதில் போட்டு ஆட்டனும் என்பேன்.

'துள்ளிகட்டித் துரங்கித் துர்கனாக் காண இன்னும் ரெண்டு வயசு போகட்டும்!”

என்னம்மா பெரிசா கேட்டுட்டா ஆடிட்டுப் போறா

நீ அவளுக்குத் துளி கட்டி உன் கல்யாணத்தை எதிர் பார்த்து வாங்கின புடவையெல்லாம் பாழாப் போறது.

போனால் போகட்டும் போ! பொத்திப் பொத்தி வச்சிண்டு என்னத்தைக் கண்டோம்?? :

தாளிக்குப் பின்னால் அக்கா குரல் லேசா நடுங்கித்தோ? துள்ளியில் படுத்துண்டா நன்னாத்தானிருக்கு ஆட்டறப்போ என்னவோ ஆகாசத்துலே மிதக்கறாப்போல, நானே என்