பக்கம்:உத்திராயணம்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர்ப்பம் 16.1

உடம்பை விட்டுக் கயண்டு, என் பிறப்பின் திரண்ட எண்ணமா, இவ்வளவு பரந்த உலகத்துலே நான் எவ்வளவு பெரிய எண்ணமா இருக்க முடியும்? அணுவுக்கும் அணுவா யார் கண்ணுக்கும் தெரியாமல் என் மனசுக்கு மட்டும் தெரிஞ்சுண்டு பரந்த வெளியில் அது என்னை எடுத்துப்போற வழியில் மிதந்துண்டு என்னைப்போல், எனக்கு முன்னால் மொதக்கொண்டே, தெரிஞ்சவாளும் தெரியாதவளுமாய் மிதந்துண்டிருக்கற வாளுடன் நானும் ஒருத்தியாய், கவிதை யாய், கதையாய், கற்பனையாய், மனசின் மகரந்தப் பொடி யாய்

-இதெல்லாம் இந்தப் பாஷையெல்லாம் எனக்கு அப்படி மிதக்கறப்போ வந்ததில்லை. மிதந்ததைப் பின் னால்- ரொம்ப நாளுக்குப் பின்னால் நெனைச்சுப் பாக்கறப்போ தோனினது

ஜனனீ துரங்கிட்டாயா?”

யாரோ துரளிக்குள் எட்டிப் பாக்கறா.

கண்ணை மூடிண்டு பாசாங்கு பண்றேன்

அதில்

என் கண் இமைமேல் ஒரு நெருப்புச் சொட்டு விழுந்து ஈரமாறது.

பயமாயிருக்கு

ஏன்?

-யாரும் ஒத்தரையொருத்தர் கேட்டுக்கொள்ளாமல் ஆனால் வீடு முழுக்க மெளனத்தில் பரவிய ஒரே கேள்விவீட்டையே தன் கொக்கித் தலையில் ஏந்திக்கொண்டு

家 家 率

அஹ் ஹா!