பக்கம்:உத்திராயணம்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 லா. ச. ராமாமிருதம்

இருக்கிற ஒரு குட்டை நேற்றுத்தான் சவுக்காரம் போட்டு இஸ்திரி போட்டேன். அப்பா, வண்டி மூணு மணிக்கு. இப்பவே ஒண்ணாயிடுத்து. நீங்கள் செக் வெட்டினால் இருக்கிற ஒண்னுரெண்டை pack பண்ணிண்டு பாங்குக்கு போய் மாத்திண்டு அப்படியே ரயிலைப் பிடிக்கத் தான் சரியாயிருக்கும். இன்னும் சாப்பிடவில்லை, ரயில்வே Cantee இல் எதையானும் வாங்கிப் பிட்டுப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்... அப்பா, are you alright?”

落72** ,Guite, arso

இல்லை என்னவோ மாதிரி..." என்ன மாதிரி.’’ எனக்குச் சொல்லத் தெரியல்லே."

லஜ்ஜையுடன் புன்னகை புரிகிறான். கனிவாய் ஒரு வார்த்தை பரிமாறிக் கொள்ளக்கூட ஏன் இப்படி பயப்படு கிறோம்? செக்கில் கையெழுத்து திடமாய்த்தான் இருக் கிறது. கண் தான் மங்கிக்கொண்டு வருகிறது. ரொம்பச் சுருக்கில் நினைவுகொள், இதுதான் உன் கடைசி சோதனை. But what do matter now? or of LJ350& ψ5& Gudaism or என் மகனுக்கு விடிவே என்றால் யார் என்ன செய்யமுடியும்? ரொட்டிக் கடைக்காரரே என்னை மன்னிச்சுடுங்க. மிச்சப் போறுப்பு உங்கள் தலையில்தான் விடியுமோ என்னவோ?

இந்தச் செக்தான் அடிச்சுரண்டல், பிறகு நஹl. அந்த நாளில் பாட்டி கற்சட்டியில் பழையதும் மோரும் பிசைந்து கையில் போடப்போட, நாங்கள் குழந்தைகள் வாரிக் கப்பக் கப்ப, அப்பா என்ன ருசி! கடைசிப்பிடி அதிர்ஷ்டம் யாருக்கோ? பாட்டி சொல்விக்கொண்டே போட்டு ஏனத்தை தலைமேல் சுற்றுவாள்: அடிக்குழம்பு ஆனைபோல!"

வாசற்படியில் frame போட்டாற்போல் நின்றவண்ணம் சேகர் என்னை ஒருமுறை திரும்பிப் பார்க்கிறான். எங்கள் கண்கள் சந்திக்கின்றன. ஆணுக்கு ஆண்கூட தொப்புள் கொடி உறவு உண்டோ?