பக்கம்:உத்திராயணம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம ப்ரஸ்ாதம்

ளிைல் கிள் மணியின் அலறல், யாரையும் விடிவேளையில் அழுத்திவிடும் (அல்ல அசர்த்திவிடுமா?) கண் செருகவி லிருந்து அவனை வெடுக்கென்று உதறிவிட்டது. கழுத் தறுப்பு. கழுத்தறுப்பு: இதோ:வந்துட்டேன்!'" (இது தினப் படிச் சடங்கு) -எழுந்து காலடியில் தயாராக வைத்திருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, வழியில் ப்ரகாஷ், அடுத்து கைக்குழந்தை, அப்புறம் மரவட்டைபோல் தலையோடு முழங்கால் சுருண்டு படுத்திருக்கும் செல்லம்மா, மற்றும் கால்கள் கைகள், கணக்கப்பிள்ளை மேஜையை இடறிக் கொண்டு-கள்ள பிரான் கைங்கரியம்-அதன்மேல் காலைப் போட்டுக்கொண்டால்தான் தூக்கம் வருமாம்-( - நாசமாப் போக கையை ஒடிக்கனும்!") அம்மா, Factoryக்குப் போயிட்டு வரானோன்னோ உடம்பை அப்படி வலிக்கறதுங் கறான்’-அப்புறம் அம்மா. கை, கால் காடு, மலை: வனாந்தரம் இருட்டில் தாண்டி, மாடியில் ஒரு படியேனும் தடுக்கி யிறங்கி-ஸைகிள் மணி மறுபடியும் அலறிற்று,

- சசி சரி, நீ ஊத்தற பச்சைத்தண்ணிக்கு இன்னிக் கென்னப்பா அவ-’ வசை அப்படியே அறுபட்டு, காலைப் பனிக்காற்றில் நாடா அலைந்தது. தெருவிளக்கில் தெரிந்தது பால்காரன் அல்ல. வேற்றுமுகம்,

'Mr. ஸேதுராமன் இங்கே இருக்காரா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/140&oldid=544229" இலிருந்து மீள்விக்கப்பட்டது