பக்கம்:உத்திராயணம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 50 லா. ச. ராமாமிருதம்

எப்பவுமே வீடு நெருப்பு பத்திண்டால், தெருவில் போற வாளுக்குத்தான் முதலில் தெரியறது. வீட்டில் இருப்ப வாளுக்கல்ல, அதுவும் ராத்ரி வேளையாயிருந்துட்டா. தலகாணி புடிச்சுண்டப்புறம்தான் அலறிப் புடைச்சுண்டு எழுந் திருக்கோம். அப்போன்னு தூக்கமும் நம்மைத் தனியா அசத்திடறது. அது மாதிரி கமலி, உன் விஷயத்தில் தாங்கள் ஏமாந்து போயிட்டோமா? இல்லே உன்னை மை, வெச்சு யாரேனும் கடத்திண்டு போயிட்டாளா?

மனுஷாள் இருக்காளே! பாதிப்பேருக்கு விஷ நாக்கு, மறு பாதிக்குப் பொய்யிலேயே புழுத்த நாக்கு கொண் டாடும் உறவுக்கு அடிப்படி அசூயை அப்படியே ஒருத்தர். ரெண்டுபேர் உண்மையைச் சொன்னால், நமக்கு உடம் பெரிச்சல். இந்த நிலைமையில் எது நிஜம். எது பொய்? என் செய்வேன் இப்போ?

உங்கள் கிணற்றடியில் ஒரு ஆள் காத்திருந்தான்அகஸ்மாத்தா நான் ஜலமெடுக்க எங்காத்துக் கிணத்துக்கு வந்திருந்தேன். ரெண்டுபேருமா கொல்லைப்புறத் தோப்பு வழியாகவே நடந்து போயிட்டா இருட்டில் அப்போ நான் யாருன்னு கண்டேன்? இப்போ உங்கள் பரவாட்டலைப் பார்த்தால் உங்கள் பொண்தானோன்னு நினைக்க வேண்டி யிருக்கு

கமலி, அப்படி நீ கடிவாளத்தைத் தெறிச்சுக்கிற மாதிரியா உன்னை அளவுக்கு மீறி அடக்கி ஆண்டோமா? நீ அப்படிப்பட்ட பொண்ணும் இல்லையே! அடங்கின சரக்குத் தானே! பள்ளிக்கூடத்து நேரத்துக்குப் போய் நேரத் துக்கு வந்துடுவையே! ஒரு சாக்குப் போக்குச் சொன்ன தில்லையே! இல்லே, பருவத்தின் கோளாறென்று சொல்லும் படி, உன் முகத் தில் மருந்துக்குக் கூட ஒரு பரு நாங்கள் கண்டதில்லையே! அந்த மாசு மறு இல்லாத முகத்தில், மோவாயில் உனக்குப் பிறவியிலேயே இருந்த திருஷ்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/160&oldid=544248" இலிருந்து மீள்விக்கப்பட்டது