பக்கம்:உத்திராயணம்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தராயணம் 17பல்லிவாயில் தும்பிபோல், வார்த்தைகள், அலறல்கள் தொண்டைக்குள் இறக்கையடித்துக்கொண்டன.

இனி என்ன?

சாந்தியும் ஹரிணியும் வரும்வரை இங்கேதானா?

வந்தாலும் அவர்கள் என்னை அவர்களிடையே தூக்கிக் கொண்டு போய் உள்ளே சேர்க்க முடியுமா?

முடியாவிட்டால், இரவு பூரா இங்கேயே இப்படித்தானா?

Tommy எங்கிருந்தோ ஓடிவந்து என் முகத்தை ஓரிரு தடவை முகர்ந்து பார்த்து பிறகு தலைமாட்டில் உட்கார்ந்து மூக்கை வானத்துக்கு நீட்டி ஒரு நீண்ட ஊளை-

இதுவேதான் என் உத்தராயணமா?

தூரத்தில் சிரிப்பு கேட்கிறது.