பக்கம்:உத்திராயணம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்த வேதி 3部

வராமல் பேசிக்கொண்டிருந்தோம். வீட்டில் ஒரு விருந்தாளி. அன்று மாலைதான் ஊரிலிருந்து வந்திருந்தார். பேச்சுக்குக் கேட்பானேன்? என்னென்னவோ ஆரம்பித்து, எங்கெங்கோ சென்று எது எதுவோ ஆகி, பிறகு அவர் எப்பவோ, பட்டணத்திலிருந்து திருச்சினாப்பள்ளிக்குச் சென்ற ஒரு ரயில் பிரயாணத்தில் போய் முடிந்தது,

அவருக்கே ஒரு தனி மிருதுக் குரல். தாழ்ந்த சுருதியில் கனகன'வென நெருப்பில் வைத்த பக்குவத்தில், அவ் விருளில், அவ்வறையை நிறைந்து, செவியில் மோதும் பொழுது, அவர் சொல்வதெல்லாம் கண்முன் வந்து நின்றது. அப்பொழுது வைகாசி மாதம் இருந்தும், ஐப்பசி மாதக் குளிரில் விறைத்தாற்போல், நான் படுக்கையில் அக்குரலின் வசப்பட்டுக் கட்டையாய்க் கிடந்தேன்:

நீங்கள் கூடப் பேப்பரில் படித்திருக்கலாம்:-நானும் அதே ரயிலில் அதே வண்டியில் உட்கார்ந்திருந்தேன். என் நல்ல காலம் எனக்குத் துாக்கம் வரவில்லை. அவர்களுக்கு வேளைக்காலம் துரங்கி வழிந்துகொண்டிருந்தார்கள். ஆனால் அப்படியும் நேரமாகி விடவில்லை.

இன்னும் கொள்ளிடம் பாலம், தண்டவாளம் போட்டு ரயில் ஒடிக்கொண்டிருந்தாலும் கட்டி முடியவில்லை. வண்டி பூரிரங்கத்தை விட்டு பாஸ்" ஆகிவிட்டது. ஆடி மாதம் நேரமாகாவிட்டாலும் முன்னிருட்டு. காவேரி பிரமாதமான பெருக்கிலிருந்தாள். அவ்வெள்ளத்தை எப்படி வர்ணிப்பது?

நானிருந்த பெட்டியில் அவ்விருவர்தான் இருந்தனர், கலியாட்கள் போலும் அவனவன் கையில், சரியாய், கால் படி மோருஞ் சாதம் பிடிக்குமளவில் ஒரு டிபன் டப்பாவை அமுக்கிக் கொண்டிருந்தான். இப்பொழுதுகூட, இதோ என் கண் முன் நிற்கிறார்கள், அவர்கள்-கன்னம் முண்டி கடை வாயில் புகையிலைச் சாறு வழியத் தூங்கிக்கொண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/45&oldid=544134" இலிருந்து மீள்விக்கப்பட்டது