பக்கம்:உத்திராயணம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 லா, ச. ராமாமிருதம்

திடீரென்று நடுப்பாலத்தில் வண்டி நின்றது. இன்னமும் கைகாட்டி சாயவில்லையோ என்னவோ? வீல்" என்று வண்டியின் ஊதல் அலறியது. அவ்வலறல், அப்பரந்த வெளியில் ஆகாயத்தைக் கிழித்துச் சென்றது. அதைக் கேட் உதும், உடனே விழித்துக்கொண்டு விட்டார்கள். அவர்கள் என்ன செய்யப்டோகிறார்கள் என்று எனக்கெப்படித் தெரியும்? ஸ்டேஷன் வந்துவிட்டதென்று நினைத்துக் கொண்டு விட்டார்கள் அவசர அவசரமாய், டி.டன் டப்பா வைத் துரக்கிக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு ஒருவன் இறங்கினான். அவனை ஒட்டினாற்போல், மற்றவனும்

இறங்கிவிட்டான்.

நான் என்ன பண்ணிக்கொண்டிருந்தேன்? எனக்குத் தெரியாது, இன்னமும் தெரியவில்லை. மூளையைச் சுரண்டி யோசனை செய்கிறேன், இன்னமும் தெரியவில்லை. இந்த பயங்கரம். என் மனதில் ஊறி, நான் அபாய அறிவிப்புச் சங்கிலியை இழுக்குமுன், கைகாட்டி சாய்ந்து வண்டி வேக மெடுத்துவிட்டது. நிறுத்தியும் என்னபயன்? அந்நள்ளிரவில், நடுவெள்ளத்தில், எதைத் தேடுவது? கரையோரமாய்த் தான் தேடவேண்டும், காலையில் முதலை விழுங்காமலிருந் தால்-ஐயோ உனக்கென்ன?

நான் வீல்" என்று அலறிவிட்டேன். எல்லோரும் என்னைச் சுற்றிக்கொண்டார்கள், எனக்கு மூன்று நாள் சரி யான ஜூரம் அடித்தது. வேளை வந்ததும், காலத்தை முடிக்க, எவ்வளவோ கணக்காய் ஏற்பாட்டைச் செய்து, காரியத்தை முடிக்கும், விதியின் வெல்ல முடியாத் தன் மையை ஆணி அறைந்தாற்போல், அவ்விருளில் அழுத்த மாய் உணர்த்திய அக்குரலின் பயங்கரத்தை என்னால் ஸ்கிக்க முடியவில்லை. அன்று முதல் என் உடலில், பழைய துணிச்சலும், ஆரோக்கியமும் ஒருநாளும் இருந்ததில்லை.

ஒருவேளை காலையில், இந்தக் கதையை கேட்டிருந் திசல் அவ்வளவு பயந்திருக்க மாட்டேனோ?-இ ருளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/46&oldid=544135" இலிருந்து மீள்விக்கப்பட்டது