பக்கம்:உத்திராயணம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்த வேதி 45

எங்கேயோ எதையோ பார்த்துக்கொண்டு-நிலைத்த பார்வையேயில்லை தூக்கத்தில் நடக்கிறப்போல-எப்பவும் காக்காய்போல தலையை சாய்த்துக்கொண்டு-இங்கித்து தினைப்பேயில்லாாம ஏற்கனவே பூனைக்கண் அதுவும் இப்போ அதில் காக்காயும் வெளியும் பிடிச்சிருக்கு-எப்பவும் இருட்டிலேயே வந்து, விளக்கைப் போட்டால், சாதாரண மாய் (தாம் ஏதாவது யோசனையாய் வந்து) திடுக்கென, குத்துக்கல் மாதிரி சுவரோரமாய் ஒக்காந்திண்டுருக்கு... எத்தனையோ தடவை நான் அம்மாதிரி வந்து, தூக்கிவாரிப் போட்டு அலறிப் புடைச்சுண்டுருக்கேன், அது குழந்தை யண்டைப் போறப்பெல்லாம் நடுங்குகிறது-எப்பவும் பாய்ச் சல்லேயே பதுங்கிண்டிருக்கு அவள் குரல், பயங்கர வெறியும், கிறிச் சென்று உச்சஸ்தாயிக்கு ஏறிக்கொண்டே போயிற்று. உஷ் பவானி-யாராவது வரப்போறாஅடக்கிக்கொள் வீண் பிராந்திக்கெல்லாம் மனசில் இடம் கொடுக்காதே-நீ படிச்ச பெண். இல்லை-நான்... பொம்மனாட்டி- (அவள் தன் வசத் தி லில்லை. அவள் போடும் கூச்சலில் கீழிருந்து யாராவது வராமல் இருக் கனுமே) என்னால் இனிமேல் ஸ்ஹிக்க முடியாது... ஒன்னு என்னை அழைச்சுண்டு போயிடு-இல்லாட்டா இங்கே ஏதாவது நடந்துடும்-து க்குப்-' -

பளிர் என்று அவள் கன்னத்தில் அவன் அறைந்த அறையில் கூடம் அதிர்ந்தது. அவள் வெறியும் தணிந்தது. கூச்சலும் சட்டென்று அடங்கியது. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்,

எள் காதில் சமுத்திரம் இறைந்தது மண்டை திகு திகு வென்று எரிந்தது.

நான் அவ்விடம் விட்டு அகன்றேன்.

இனி என்ன செய்வது?

என் பவுரஷம் எல்லாம் எங்கே போயிற்று. ஒரு காரணமு மில்லாமல் என்னைக் காட்டிக் கொடுத்த அவள் பின்