பக்கம்:உத்திராயணம்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலி ஆடு

வெள்ளிக்கிழமை மத்தியானம் மணி சுமார் மூன்றி ருக்கும். .

வீட்டு ரேழியின் ஒரு ஒரத்தில் ஒரு யந்திரம், மற்றொரு மூலையில் கதவோரத்தில் துடைப்பம் மறைவாய் வைக்கப் பட்டிருக்கிறது. இன்னொரு மூலையில் உரல். உலக்கை யைச் சுவரில் சாத்தியிருக்கிறது. கடப்பாரை ஒன்று உர வின் பக்கத்தில் கிடக்கிறது.

ரேழியின் நடுவில் இரண்டு பேர் புலியாடு ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

அவளுக்கு சுமார் பதினைந்து அல்லது பதினாறு வயது தானி ருக்கும். வெள்ளிக்கிழமையாதலால், எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து, உலருவதற்காக மயிரை ஆற்றி விட்டிருந்தாள். இப்பொழுது அது நன்றாய், அடர்த்தி யாய், அவள் தோள், முதுகு, கழுத்து எங்கும் மேகம் படர்ந்த மாதிரி பிசுபிசு வென்று படர்ந்திருந்தது.

அப்படி ஒன்றும் அதிகச் சிகப்பு இல்லை. கறுப்பும் இல்லை. மாநிறம். பெரிய அழகு என்று சொல்லுவதற். கில்லை. ஆனால் முகத்தில் மாத்திரம் ஒரு தனி குறுகுறுப்பு. அதுவும் இன்றைக்கு மஞ்சள் அவள் முகத்தில் நன்றாய்ப் பற்றியிருந்தது. சரியாய் ஒரு தம்பிடி அகலத்திற்கு அவள் இட்டுக்கொண்டிருந்த குங்குமப் பொட்டு, அவள் முக வசீகரத்தை எடுத்துக் காட்டிற்று.