பக்கம்:உத்திராயணம்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ்வாலை 57

கும் கண்ட சாமானைக் கண்ட இடத்திலே போட்டுடறாளே, அதைத் திருப்பி எடுத்து வெக்கறதுக்கும்தான்னு நெனைக் கறேன். அவாளுக்குத்தான் கேஸாம் பணமும் பொண் டாட்டியாயிடுத்தே? அப்புறம் நம்மை ஏன் லக்ஷயம் பண்றா?

எனக்குப் பொறுக்க முடியல்லே. எத்தனை நாழி படிக்கறது? எத்தனை நாழிதான் தாயக்கட்டான் ஆடறது: எதிர்க்காயே கூட நானே வெச்சிண்டு? சுவாரஸ்யமால்லே. எனக்கு என்னமோ மாதிரியிருக்கு. கஷ்டமா!

என்னமோ ஆரம்பிக்கறப்போ ரொம்ப லக்ஷணமா ஆரம்பிச்சேன், அப்புறம் என்னையும் அறியாமே, அது இப்படிப் போயிடுத்து, தெரியல்லே.

சித்திரை 12: இதென்ன, என்ன வந்துடுத்து நேக்குன்னு, தெரியல்லே. நேத்து ராத்திரி மொதக்கொண்டு மனசிலேயும் ஒடம்பிலேயும் ஏதோ ஒருவிதமாயிருக்கு,

நேத்து சாயந்தரம், என்னமோ, ஆத்திலேதான் கொட்டு கொட்டுன்னு முழிச்சுண்டிருக்கோமேன்னுரட்டு, கோவிலுக்குப் போனேன். சாயங்கால வேளை. தீபாராதனை நடக்கற சமயம். நான் கோவிலுக்குள்ளே நொழஞ்சவுட னேயே சின்ன களையவரம் உண்டாச்சு, இங்கேதான் சொல்ல வேண்டியதில்லையே, பேன் நசுக்கினா, உடனே அதைப்பத்திப் பெரிய கூட்டம் போடுமே, அவ்வளவு பட்டிக் காடாயிருக்கு...

திடீர்ன்னு பின்னாலே 'ங்ணங்ணன்னு மணி அடிச் சுண்டே, யாரோ வழியே விடு, வழியே விடு'ன்னு அதட் டிண்டே தடதடன்னு வந்தா, நான் ஒதுங்கி, நிமுந்து பார்த்தேன். சடக்குன்னு என்னைப் பார்த்ததும் குருக்கள் மூஞ்சி மாறித்து. என்னையும் கும்பலோடு கும்பலா நினைச் சுண்டுட்டாப்போல இருக்கு, குஞ்சிரிப்பா சிகிச்சுண்டே போயிட்டான்.