பக்கம்:உத்திராயணம்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ்வாலை 59

போச்சு. அப்பா! அவன் ரெண்டு கண்ணும் ஊசிமுனை மாதிரி பளபளன்னு எப்படி ஜொலிச்சுது! என்னை அவன் பார்க்கற மாதிரியே இல்லை. ஏதோ எனக்குத் தெரியாமே, எனக்குள்ளேயிருக்கும் எதையோ அவன் வெட்ட வெளிச்ச மாப் பார்க்கற மாதிரியிருந்தது! என்னையே மறந்துட் டேன். அப்படி எத்தனை நாழியிருந்தேனோ தெரியாது. குஞ்சிரிப்பா சிரிச்சுட்டு, குங்குமத்தே குடுத்துட்டுப் போயிட் டான், நானும் சரசரன்னு ஆத்துக்கு வந்துட்டேன்.

அப்போ மொதக் கொண்டு மனசு சரியில்லே. அவன் சிரிப்பும், அவன் பார்த்த பார்வையும், அப்படியே முன் னாலே வந்து நிக்கறது. ஏதாவது புஸ்தகத்தே எடுத்துப் பார்க்கலாம்னா, நடுவிலே வந்து மறைச்சிண்டு நிக்கிறது...

சித்திரை 13. நேத்திக்கு ஒண்னு நடந்துடுத்து, நான் என்ன செய்யப்போறேன்? பார்க்கறவா என்ன சொல்லுவா? ஆனா என் மனசு ஒரே கொந்தளிப்பிலே நிற்கிறது.

நேத்து சாயந்தரம் இத்தனை நாழிதான் இருக்கும், நன்னா இருட்டுக் கவிஞ்சுபோச்சு. கையெழுத்துக்கூட மறைஞ்சுடுத்து. நகrத்ரம், ஒவ்வொண்ணா, மினுக்மினுக்' குன்னு வந்துடுத்து. நான் ஜன்னலண்டை நின்னுண்டு ஏதோ குருட்டு யோசனை பண்ணிண்டு ஆகாசத்தே பார்த் துண்டு இருந்தேன்.

திடீர்ன்னு யாரோ செவரேறி பொத்’துன்னு குதிக்கர சத்தம் கேட்குது. அடுத்த நிமிஷம் அவன் என் முன்னாலே வந்து நின்னான்.

எனக்கு திடுக் குனு தூக்கிவாரிப் போட்டது. அவன் தோள்பட்டையிலே தொங்கிண்டிருந்த நைவேத்ய மூட்டை யும், அவன் சுருட்டை மயிரும், அவன் தாடியும், அவன் சிலை யடிச்சு வச்சாப்போல அசையாமே, அலுங்காமே, கற்பூரக் கொழுந்து மாதிரி நிக்கறதும்,