பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

9


1

குறட்டையை விரட்டுங்கள்!

ஆனந்தமான உறக்கத்திற்கு இடையிலே, அநாகரிகமான இரைச்சலோடு, அடுத்திருப்பவர்களையும், அக்கம் பக்கம் உள்ளவர்களையும் ஆத்திரத்துடன் கிளர்ச்சியுறச் செய்யும் 'இந்தக் குறட்டை இருக்கிறதே' கொஞ்சம் வேண்டாத விருந்தாளிதான்.

மழைக் காலத் தவளைகளின் மணியான ஓலங்களாக அரவை எந்திரம் ஒன்று அரக்கக் குணத்தோடு எழுப்பும் இரைச்சலாக; காய்ந்த இலைகளிலே தண்ணீர் விழுந்து எழுப்புகின்ற ஓங்காரமாக; அடிபட்ட கருவண்டு பாய்ந்து எழுப்பும் ரீங்காரமாக; தொண்டை கட்டிய பாகவதர் சுதி மாறி எழுப்பும் சங்கீதமாக.... இப்படி எத்தனையோ சலசலப்புகளைக் காட்டி வந்து கொடுமைப் படுத்தும் குறட்டை ஒரு விரும்பத்தகாத விரோதிதான்.

என்ன செய்வது? நிம்மதியாகப் படுக்கையில் விழுந்தவுடன், நீண்டு நிமிர்ந்து இயங்கத் தொடங்கி விடுகிறதே? என்ன காரணம்?

யாருக்கும் அடங்காமல், யாரைக் கண்டும் அஞ்சாமல் ஆலையின் சங்காக ஆரோகணம் பாடுகிறதே? ஏன்?

ஆமாம்! ஜலதோஷம் என்பார்களே அது பிடித்து விட்டால் ஆரம்பமாகிவிடும் குறட்டை. 'சளி பிடித்ததோ சனி பிடித்ததோ' என்பார்கள். மூக்கிலே நீராக ஒழுகி, தொண்டையில் வலியோடு கூடிய நிலைமையை ஏற்படுத்திக் கொள்கிறபொழுது,