பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

11


அதனை மருத்துவர் உதவியுடன் அகற்றி விட்டால், காற்று உள்ளே போய் வர நன்கு வழி கிடைப்பதால், வாய் மூலம் மூச்சிழுக்கும் 'வம்பு ' இல்லாமல் போய் விடுகின்றது.

சில சமயங்களில், தூசியைக் கிளப்பி விடுகின்ற தொழில்களைச் செய்கின்றவர்கள், தூசி கிளப்பும் இடத்தில் வசிக்கின்றவர்கள், வேலை செய்பவர்கள், இந்த அவதிக்கு மிக எளிதாக ஆட்படுவதுண்டு.

சுரங்கத்தில் வேலை செய்பவர்கள், பஞ்சாலையில் பணியாற்றுபவர்கள், சிமெண்டுடன் செயல்படுபவர்கள், மற்றும் மில்கள், ஆஸ்பெஸ்டாஸ் கலவைகளில் நிற்பவர்கள், இத்தகைய மூக்கடைப்பு நிலைமைக்கு நிலையான தளமாகின்றார்கள்.

தூசிகள் மூக்கிற்குள் சென்று, காற்றுப் புகுகின்ற பாதையை அடைத்துக் கொண்டு விடுவதல்லாமல், புண்ணாக்கிவிடுகின்றன. உள் மூக்கினை எளிதாக பட படக்கச் செய்கின்ற பாங்கிலே ஆக்கிவிடுவதால், வாய்தான் உறக்கத்தில் கை கொடுக்கின்றது.

புகைப்பவர்களுக்கும் இந்தப் பொல்லாங்கு அதிகமாகவே நிகழ்கிறது. புகையானது மூக்கிற்குள்ளே போய் வருவதால், மூக்கின் மென்மையான உட்பகுதியை கன்றிப் போக வைத்து குறு குறுப்புக்கு ஆளாக்கி விடுகின்றது. அதனால் அந்தக் காற்றுப்பாதை கனஜோராக அடைபட்டுப் போகின்றது. அதனால் அவர்கள் மிக அருமையாக குறட்டைப் போடுகின்றார்கள்.

புகைப்பதை விட்டுவிட்டால், அவர்களைப் பற்றிய குறட்டைப் புகாரும் போய் விடும் என்பதை புகைப்பவர்கள் ஒத்துக் கொண்டு ஒதுக்கி விட்டால்,