பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

13


அதிக உழைப்பின் காரணமாக ஓய்வின்மை காரணமாகக் குறட்டை விடவும் நேரிடும்.

எந்தக் காரணமாக இருந்தாலும், வாய் வழியே மூச்சு விடும் பழக்கத்தை தவிர்த்து விட்டால், விரட்டியடிக்கலாம் குறட்டையை!

விடாதீர்கள்! வெற்றி உங்களுக்குத்தான்.


குறிப்பு: அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு டாக்டர்கள் குறட்டையைக் கட்டுப்படுத்த ஒரு சிகிச்சை முறையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். நோயாளியின் மூக்கிற்குள் பிராணவாயு ஸிலிண்டரிலிருந்து ஒரே அழுத்தத்தில் வாயு செல்லுமாறு செய்கிறார்கள். நோயாளியின் இயல்பான சுவாசத்தைவிடச் சற்று அதிகமான அழுத்தத்தில் இந்த வாயு செலுத்தப்படுகிறது. இதனால் சுவாசக் குழாயில் தொய்வு விழுவதில்லை. தொய்வினால் விளையும் அதிர்வுகளும் ஏற்படுவதில்லை. குறட்டையும் ஒடுங்கி விடுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக ஊளைச் சதை போட்டவர்கள் அல்லது சுவாசக் குழாயில் அடைப்பு உள்ளவர்களுக்கு இந்தச் சாதனம் பயன்படாது.