பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

15


ஆகவே, சிக்கல் நிறைந்த தன்மையை, சீராகவும் செழிப்பாகவும் மாற்றிக் கொள்ளவும், சிறப்பாக அகற்றும் வழிகளையும் நாம் இனி காண்போம்.

'இயற்கையின் அழைப்பு என்று இதனைக் கூறுவார்கள். இரவு படுத்து உறங்கி, காலையில் கண் விழித்த உடனேயே, 'இந்த அழைப்பு' வந்துவிடும் அழைப்பின் அவசரத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, செல்பவர்கள் ஒருவித மகிழ்ச்சிகரமான மனோநிலையையும், இலேசான தன்மையையும் உணருவார்கள்.

இரண்டு மூன்று நாட்களுக்கு இத்தகைய உணர்வுகள் இல்லாமல், இந்த அழைப்பு வராமல் தவிப்பதையும், அவ்வாறு வருகின்ற அழைப்புக்குப் பிறகு படுகின்ற வேதனைகளையும் அவலமான வலிகளையும்தான், சுருக்கமாகவும் செல்லமாகவும் ‘மலச்சிக்கல்' என்று கூறி விடுகின்றார்கள்.

அச்சம் வேண்டாம்

சிக்கல் என்றதுமே முகம் சுருங்கி, மனம் நடுங்கிப் போய் விடுபவர்கள் உண்டு, ஆனால் அஞ்சவேண்டிய அவசியமில்லை . இது ஒரு வியாதி அல்ல ... தடங்கல். அவ்வளவுதான்.

இது தனிப்பட்ட ஒருவருக்கு மட்டுமல்ல ... உலகத்தில் உள்ள அனைவருக்கும் சாதாரணமாக ஏற்படக்கூடிய சகஜ நிலைதான்.

நாகரிகத்தில் உழல்கின்ற நாடுகளில் வசிக்கின்ற 90 சதவிகிதத்தினருக்கு இந்தச் சிக்கல் உண்டு. அதுபோலவே