பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நாகரிகமற்ற, முன்னேற்றமடையாத நாடுகளில் இருக்கின்றவர்களுக்கும் இந்த இடர்ப்பாடு நிறைய உண்டு.

ஆகவே, நமக்கு வரும் என்பது நிச்சயம் என்பது போலவே, வராமல் காத்துக் கொள்ளவும் வழி இருக்கின்றது.

என்ன செய்யும்?

மலச்சிக்கல் வந்தால் என்ன செய்யும்?

தினசரி காலை மாலை கட்டாயம் கழிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அப்படி இல்லையென்றால் உடலில் அசதி ஏற்படும். எப்படியோ இருக்கிறது என்ற களைப்பு நேரிடும். வாயுத் தொல்லை வரும். வேண்டாத தலைவலியும் வந்து தொலையும்.

இதிலிருந்து விடுவித்துக் கொள்ளவும், வயிறும் உடலும் இலேசாகத் தோன்றுவது போன்ற உணர்வு கொள்ளவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இனிக்காண்போம்.

மலம் கழிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளாததுதான் முக்கிய காரணம் என்பார்கள்.

இதற்காக, பல மாதிரிப்பட்ட மாத்திரைகளையும், மருந்துகளையும் உட்கொள்ளுவதால், குடல் மந்தப் பட்டுப் போய்விடுகிறது என்பார்கள்.

இதனால் என்ன கெட்டு விடப் போகிறது என்று 'அடக்கிக் கொண்டுவிடுகிற' அடக்கத் தன்மையாலும் மோசமாகிவிடுகிறது.