பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

17



மருந்து சாப்பிட்டுப் போகின்ற பழக்கம் வந்து விடுவதால், குடலின் அடிபாகங்கள். மருந்துக்காகக் காத்துக் கொண்டு, வேலை செய்யாது இருந்து விடுவதும் ஒரு காரணமாகும்.

கடினமான திடப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதும், காரம், புளி அதிகம் சேர்ந்த உணவு வகைகளை விருப்பமாக உண்பதும் இப்படி மலம் இறுக்கமாகிப் போவதற்கு ஏதுவாகும்.

ஆகவே, காரணம் தெரிந்த பிறகு, அதற்கேற்ற காரிய வகைகளை செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும்.

உணவு உண்ட பிறகாவது, மலம் கழிப்பதற்காக கழிவறைக்குச் செல்வதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால், பற்றாக்குறை உணவு உண்டால் கூட, மலச்சிக்கல் ஏற்பட வழியுண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

மலம் கழிக்கும் உணர்வு வருகிறபொழுது அதனை அலட்சியம் செய்யாமல், உடனே மலம் கழித்திடல் வேண்டும்.

கழிவறையில் அவசரப்படவே கூடாது. அதிக நேரம் ஆனாலும் பரவாயில்லை என்ற நிதானத்துடன், பொறுமை இழந்து போகாமல் காத்திருக்கலாம்.

இடுப்பைப் பிடித்து விடுவதும் வயிற்றைச் சுற்றி மசாஜ் செய்வதும் நல்லது. அதிகமாகத் தண்ணீர் குடிப்பது நல்லது.