பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வசதியிருந்தால் பழரசங்கள் பருகலாம். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் உட்கொள்ளுவது, நிலைமையை எளிதாக்க உதவும். நிறைய பழங்கள் உண்ணும் பழக்கத்தைக் கைக்கொள்ளவும்.

இரவு நேரத்தில், வெந்நீரில் தேனும், எலுமிச்சம் பழச்சாறும் கலக்கிக் குடித்தல் நன்மை பயக்கும்.

உலர வைத்த வற்றல் பழங்களை வெந்நீரில் ஊறவைத்துச் சாப்பிடுவது இறுக்கத்தை மென்மைப் படுத்தும் என்கிறார்கள்.

அதிகமாக எண்ணெயில் வறுத்த வறுவல் வகைகளை உண்பதைத் தவிர்க்கலாம்.

எப்பொழுதும் அஜீரணப்படுத்தும் உணவு வகைகளையும் உண்ணக்கூடாது.

எனிமா போன்ற பழக்கமும் எளிதாக மலம் கழிக்க உதவும் என்றாலும், நம் நாட்டில் அதனை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. பழக்கம் உள்ளவர்கள் அதனை மருத்துவரின் அறிவுரையுடன் பின்பற்றலாம்.

ஆகவே, மலச்சிக்கல் வந்து விட்டதே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். எல்லோருக்கும் வரக்கூடிய இயல்பான குறைபாடுதான்.

நல்ல தேகப் பயிற்சி செய்தால், தினம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் திறநிலை ஏற்பட்டு விடும். அதனால் இந்தத் தொல்லை நீங்கிவிடும். உடற்பயிற்சி தான் இதனைத் தீர்க்க எளிதான அணுகுமுறை என்பதை மட்டும் நீங்கள் அறிந்து பழகி, பயனடையுங்கள்.