பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல் நலக் குறிப்புகள்

19



3. தலைவலி

பிரதான வலி

எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பார்கள். பிரதானமான சிரசுக்கே வலி வருகிறது என்றால் பிராணன் போகிறதே என்று பேசாமல் எப்படி இருக்க முடியும்?

அப்படி என்ன இந்த வலி பிரமாதமானதா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா!

இது சாதாரணமாக வந்து போகிற ஒரு வலிதான். அதுவும் இந்த நவீன காலத்தில் நாளெல்லாம் நடைபெறுகின்ற, நாட்டியமான நடைமுறைகளில், நிச்சயம் வந்து தலைகாட்டுகின்ற வலிதான் இது.

என்னதான் காரணம்?

தொண்ணூறு சதவிகிதம் தலைவலிக்குக் காரணம் டென்ஷன் (படபடப்பு) என்பார்கள்.

நீங்காத நோயினால் ஏற்பட்ட களைப்பும் இளைப்பும் ஒரு காரணமாகக்கூட இருக்கலாம்.

சரியாக உணவு உண்ணாமல் பட்டினி கிடந்தாலும் அல்லது போதாத உணவினை அருந்தி வாழ்ந்து வந்தாலும் வேண்டாத விருந்தாளியாக இந்த வலி வந்து சேரும்.

நல்ல ஓய்வின்மையும், உறக்கம் இல்லாமையும்; மன உலைச்சலும், எரிச்சலும், நினைவிலே கலக்கமும் இந்த வலியை வருந்தி அழைத்துவிடும்.