பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


எப்படி ஏற்படுகிறது?

அதிக சிந்தனையினால் அல்லது களைப்பினால் இந்த வலி வருகிறது என்று கூறினோம். அப்பொழுது சுருங்குகின்ற கழுத்தின் பின்புறப் பகுதியிலுள்ள தசைகள், அங்கு இருக்கின்ற எலும்பு மூட்டுக்களை இறுக்கி விடுகின்றன. அதனால் நரம்புகள் பாதிக்கப்பட்டு ஒரு பரபரப்பான பதட்ட சூழ்நிலையை உண்டு பண்ணுகிறது.

இதன் காரணமாக, அந்தப் பகுதியில் பரவியுள்ள இரத்தக்குழாய்களின் இயக்கம் பாதிக்கப்படுகின்றன.

படபடப்பு ஏற்பட்டதன் காரணமாக, நாடித் துடிப்பின் வேகமும் அதிகரிக்கிறது அதனால் தான், நெற்றியின் பொட்டில் 'பொட்டு பொட்டென்று ' போடுகிறது என்று நெற்றியின் இருபுறங்களையும் அழுத்திப் பிடித்துக் கொள்கிறோம்.

ஒரு பக்கத் தலைவலி என்பார்கள். அது நெற்றியின் ஒரு பக்கத்தில் பெரும் வேதனையைக் கொடுக்கும். இது சாதாரண தலைவலியை விட சங்கடப்படுத்துவதில் வெகு சமர்த்தாகும். தலை முழுவதையும் அல்லது மண்டை ஓட்டின் உட்பகுதி முழுவதிலும் கூட வலி விளையாடும் பூமியாக மாற்றிக் கொள்ளும்.

சில சமயங்களில் கழுத்துப் பகுதியிலிருந்து கீழே வந்து கன்னம், தாடையெலும்பு வரையிலும் பரவி வரும்.

என்ன செய்ய வேண்டும்?

1. மூளைப் பகுதியைச் சுற்றிப் பரவியிருக்கும் சிறு சிறு இரத்தக் குழாய்கள் வீக்கம் பெற்றுப் போவதால் ஏற்படுகின்ற தலைவலிக்கு சிறு நிவாரணம் இரத்தக் குழாய்களின் வீக்கத்தைக் குறைத்திட முயல வேண்டும். நல்ல தரமான சூடான காபி அந்தப் பணியைச் செய்திடும் என்பார்கள்.