பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

21


கழுத்துப் பகுதியை நன்றாக அழுத்தி விட்டு மசாஜ் செய்வது போல் செய்து கொண்டே வந்தால், மட்டுக்களில் ஏற்பட்ட இறுக்கம் குறைந்து, சீரான இரத்த ஓட்டம் பெருகும்.

குளிர்ந்த நீரிலே நனைத்துப் பிழிந்த துணியை, கழுத்தின் பின் பகுதியில் வைத்து அழுத்தித் துடைத்து வர வர, வலி குறைந்து ஓர் இதம் ஏற்படும்.

2. இரத்தத்திலுள்ள சர்க்கரைசத்து (Low Blood sugar) குறையும் போது நிச்சயமாக தலைவலி ஏற்படுகிறது.

அதாவது, ஓரிரு வேளைகள் உணவு உண்ணாமல் பட்டினி கிடக்கும் பொழுது ஏற்படுகின்ற தலைவலி, சாப் பிட்டு முடிந்தவுடன் மறைந்து போகிறது என்பதையும் உணர முடிகிறது.

மதுபானம் சாப்பிட்ட பிறகு தலைவலி வருவதை குடிகாரர்கள் உணர்வார்கள். அதுவும், இரத்தத்தில் சர்க்கரை குறைந்து போகின்ற காரணத்தால்தான்.

பழரசத்தில் ஒரு தேக்கரண்டி தேன் விட்டுக் குடித்தால், வந்த தலைவலி போய் விடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

3. உணவு உண்பதில் ஏற்படுகின்ற அலர்ஜியின் காரணமாக, தலைவலி ஏற்படுவதுண்டு.

ஒரு குறிப்பிட்ட உணவு வகையை உண்ட பிறகு, வரும் தலைவலியை, எந்த உணவு உண்டபிறகு வருகிறது என்பதை உணர்ந்து கொண்டு, அதை நிச்சயமாகத் தவிர்த்து விட்டால். தலைவலி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

4. சளி பிடித்துக் கொண்டு, மூக்கு ஒழுகிக் கொண்டு கண்களில் நீர் வடிந்து கொண்டிருக்கும் சமயத்தில் கூட தலைவலி ஏற்படுவதுண்டு.