பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கீழே குனியும் பொழுது, மூக்கில் சளி பெருகி வரும் அதைத் தடுப்பதற்காக, குனிந்திருக்காமல், நிமிர்ந்த நிலையில் இருப்பதும், மூக்கிற்கு அதிக சிரமம் தராமல் பார்த்துக் கொள்வதும்; மிகவும் உணர்ச்சி வயப்படுகின்ற மூக்கில் உள்ள இரத்தக் குழாய்களை பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும், தலைவலியை விரைவில் போக்க உதவும்.

சளிக்கான மருந்தைப் பயன்படுத்தினால், தலைவலியும் தானாகக் குறைந்துவிடும்.

5. மூக்கடைப்பு ஏற்பட்டு, மூச்சுவிட முடியாமல் திணறுகின்றபோது, மூக்கு மற்றும் கண்கள் பகுதியில் உள்ள எலும்புக் குழிப்பகுதிகள் பாதிக்கப்படுவதால், அந்தப் பகுதியிலிருந்து வலி பரவி, தலைக்கும் சென்று விடும்.

அதனால், மூக்கு அடைப்பதைத் திறந்துவிடவும் சுவாசத்தை எளிதாக இயற்கையாக விடவும் கூடிய வகையில் மருந்தைத் தடவி, பார்த்துக் கொண்டால் தானாக தலைவலி போய்விடும்.

6. புகையின் நடுவிலே நின்று தவிப்பதும் கரியமில வாயுவை சுவாசிக்க நேரிடும் பொழுதும் தலைவலி ஏற்படக் கூடும்.

நல்ல சுத்தமான பிராணவாயுவை சுவாசித்தால், ஏற்பட்ட தலைவலியை ஓட்டி விட முடியும்.

7. தொற்றிக் கொள்ளும் நோய்க் கிருமிகளால் ஏற்படுகின்ற தலைவலியினைத் தொடர்ந்து காய்ச்சல் ஏற்படுவதும் உண்டு.

தலை வலிக்குச் சிறந்த மருந்து ஆஸ்பரின் என்கிறார்கள் தொடர்ந்து தலைவலி வருமானால் உடனே டாக்டரை அணுகுவதுதான் அறிவுடமையாகும்.