பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

23


4.சிறந்த உடல் நலத்திற்குத் தேநீர்!

தேநீருக்கு இப்பொழுது இருப்பதை விட அதிக ஆதரவு கிடைக்க வேண்டும். ஒரு கோப்பை “ ஸ்டிராங் டீ குடிப்பவருக்கு அமைதி ஏற்படுத்துவதுடன், ஐந்து அல்லது ஆறு மணி நேரம் வரை மன ஈடுபாட்டையும் வேலைத் திறனையும் அது ஊக்குவிக்கிறது. இதற்குக் காரணம் என்ன? இயற்கையில் உள்ள அநேகமாக எல்லா வைட்டமின்களும் உடலுக்குத் தேவையான இரும்பு, மாக்னீசியம், மாங்கனீஸ், சோடியா, சிலிகன், பொட்டாசியம், கால்சியம், அயோடின் தாமிரம், தங்கம், பாஸ்பரஸ் முதலிய மற்றும் பல பொருள்களும் தேயிலையில் உள்ளன.

சில எளிய விதிகளைப் பின்பற்றினால், புதிதாகத் தயாரிக்கப்பட்ட தேநீர் நல்ல சுவையாக இருப்பதுடன் உடலுக்கும் நல்லது. சோவியத் யூனியனில் தேநீரைப் பால் கலக்காமல் அருந்துவதுதான் வழக்கம்.

மற்ற உணவுப் பொருள்களிலிருந்து தேயிலையைத் தனியாக வைத்திருப்பது நல்லது. அதைப் பீங்கான அல்லது கண்ணாடி ஜாடியில் போட்டு நன்றாக மூடிவைக்க வேண்டும். வேறு மணங்கள் பட்டால் தேயிலை கெட்டு விடும்; திறந்து வைத்திருந்தால் தேயிலையின் மணமும், உடலுக்கு நன்மை செய்யும் திறனும் கெட்டு விடுகின்றன.

தேநீர் தயாரிக்கும் பொழுது வெகுநேரமாகக் கொதித்துக் கொண்டு இருக்கும் வெந்நீரைப் பயன்படுத்தக் கூடாது; அப்படிச் செய்தால், தேநீரில்