பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மணம் இராது. மின்சார வெந்நீரைப் பாத்திரங்களிலிருந்து எடுக்கும் வெந்நீரும் பயனற்றது. ஆறிய வெந்நீரை மீண்டும் கொதிக்க வைத்து உபயோகிப்பதோ, அல்லது அதனோடு குளிர்ந்த நீரைக் கலந்து உபயோகிப்பதோ கூடாது. கொதிக்காத தண்ணீரையும் பயன்படுத்தக் கூடாது. தேநீர் தயாரிப்பதற்காகச் சூடேற்றப்பட்ட நீரில் ஒரு கட்டி சர்க்கரையைப் போட்டால், நீரில் கரைந்துள்ள உப்புக்கள் அடியில் நின்று விடும்.

தவிர தேநீரின் தரம், அது எந்தப்பாத்திரத்தில் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதைப் பெரிதும் பொறுத்திருக்கிறது. இதற்குப் பீங்கான் பாத்திரங்கள் மிகச் சிறந்தவை. உலோகப் பாத்திரங்கள் பொருத்தமில்லை. முதலில் பாத்திரத்தைச் சுட வைத்து, பிறகு அதில் தேயிலையைப் போட்டு, கொதிக்கும் நீரை ஊற்ற வேண்டும். சாதாரணமாக, கோப்பைக்கு ஒரு தேக்கரண்டி, என்ற அடிப்படையில் தேயிலையைப் போட்டுத் தேநீர் தயாரிப்பது வழக்கம்.

உதாரணமாக, 3 கோப்பை தேநீர் தயாரிக்க வேண்டுமானால் 4 கரண்டி தேயிலையைப் பயன்படுத்த வேண்டும். தேநீர் வைத்திருக்கும் பாத்திரத்தை, அதன் மூடியில் உள்ள துளைகளைச் சேர்த்து ஒரு துணியினால் மூட வேண்டும். அப்போதுதான் தேநீரின் மணம் பாதுகாக்கப்படும். பிறகு ஐந்து நிமிடத்தில் தேநீரை அருந்தலாம். புதிதாகத் தயாரிக்கப்பட்ட தேநீர்தான் நன்றாக இருக்கும். தேநீரை நெடு நேரம் சூடாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக சிலர் தேநீர்ப் பாத்திரத்தைச் சிப்பத்தினால் மூடி வைப்பார்கள்.