பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல் நலக் குறிப்புகள்

25


அதனால் தேநீரில் சில தீய சத்துக்கள் தோன்றி விடுகின்றன. தேநீரை எவ்வளவுக்கு எவ்வளவு அதிக நேரம் வைத்திருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு இந்தத் தீய பொருள்களின் அளவும் அதிகரிக்கும். சுவையிழந்த தேநீரை அருந்தக் கூடாது என்பது அதனால் தான். "இரவு முழுவதும் வைத்திருத்த தேநீர், விஷப் பரப்பு போன்றது என்கிறது ஒரு சீனப் பழமொழி.

முதியோர், குழந்தைகள் ஆகிய இரு சாராருக்குமே தேநீர் நல்லது. உடலில் வைட்டமின் சத்து குறைந்துள்ள குழந்தைகளுக்குத் தேநீர் மிகவும் நல்லது. ஒரு நாளைக்கு 3 அல்லது 4 கோப்பை தேநீர் அருந்தினால். உடலுக்கு மிகவும் தேவையான 'வைட்டமின் - பி' வேண்டிய அளவு கிடைக்கிறது.

ஜலதோஷத்திற்குத் தேநீர் மிகச் சிறந்த மருந்து போன்றது. ஒரு கோப்பை தேநீரில், ஒரு தேக்கரண்டி (டேபிள் ஸ்பூன்) பாலும் கலந்து அருந்தினால் மற்றெல்லா மருந்துகளையும் விட அது நல்ல குணம் அளிக்கிறது. ஜலதோஷத்தினால் கஷ்டப்படுபவர், இவ்விதம் தயாரித்த தேநீரை அருந்திவிட்டு நன்றாகப் போர்த்துக் கொண்டு படுத்துவிட வேண்டும். ஒரு நாளைக்கு 5 கோப்பை தேநீர் அருந்தினால், ஜலதோஷம் விரைவில் குணமாகும்.

சுருங்கச் சொல்வதானால், சிறந்த உடல் நலத்திற்குத் தேநீர் ஓர் இன்றியமையாத பானமாகும்.