பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நோயே வராமல் இருக்க ஒருவர் நான்கு வழிகளைக் கூறுகிறார். அந்த மொழிகளைக் கேட்டு நடந்து பாருங்கள், நிச்சயமாக நீங்களும் நிறைவான நலத்தோடு, நோய் அணுகா வளத்தோடு வாழலாம்.

"ஓரடி நடவேன்.
ஈரடி கிடவேன்:
இருந்து உண்ணேன்.
கிடந்து உறங்கேன்."

உங்களுக்கு இந்த உபதேச மந்திரத்தின் பொருள் விளங்குகிறதா என்று பாருங்கள். இல்லையேல், பின்வரும் விளக்கத்தையும் படியுங்கள்.

ஓரடி நடவேன்

காலைநேர வெயிலிலும் மாலைநேர வெயிலிலும் நமது நிழல் நீண்டு தெரியும். உச்சி வெயிலின் போது, நமக்குள்ளே விழுந்து மறைந்து கிடப்பது போல இருக்கும். அதைத்தான் அவர் 'ஓரடி' என்கிறார். அதாவது, ஓரடியாக நிழல் விழுகின்ற வெயில் நேரத்தில் நான் நடக்க மாட்டேன்.

கடுமையான வெயில் நேரத்தில் கண்ட கண்ட இடங்களுக்கு அலைந்து திரிந்தால், நிச்சயம் நலிவு ஏற்படத்தானே செய்யும்? ஆகவே, அதைத் தவிர்த்து வாழ வேண்டும் என்பது ஒன்று.

ஈரடி கிடவேன்

ஈரமாக இருக்கின்ற இடத்திலோ அல்லது தரையிலோ இருக்கவோ, நடக்கவோ, படுக்கவோ, மாட்டேன் என்பது இதற்கு அர்த்தம். ஈரத்தில் இருப்பதன் முடிவு சளி