பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

29


போன்ற சங்கடத்தில் அல்லவா தள்ளிவிடும் ! அதைத் தொடர்ந்து குளிர், நளிர், ஜுரம் போன்றவையும் வருமே!

இருந்து உண்ணேன்

சோம்பலாக இருந்து சோற்று ருசி கண்டு சாப்பிட மாட்டேன் என்பது இதன் பொருள். பசிதான் ருசியறியும். 'பசித்த பின் புசி' என்பது பழமொழி. பசிக்காத நேரத்திலும் உணவு உண்பது பஞ்சமா பாதகமாகும். உழைத்து அதன்பின் உண்டால் உணவும் செரிக்கும். உட்கார்ந்து இருந்து உண்டு கொண்டே இருந்தால், அஜீரணம் வரும். அடுத்து மலச்சிக்கல் வரும். அசதி வரும். தலைவலி வரும். மூலம் வரும் முக்கியமான நோய்களும் முண்டியடித்துக் கொண்டு வரத் தொடங்கி விடும்.

அதனால் தான் 'இருந்து உண்ணாமல், உழைத்து உண்பேன்' என்று உபதேசிக்கிறார்.

கிடந்து உறங்கேன்

உறக்கம் என்பது உடலுக்கு ஓய்வு தரும் செயல், புத்துணர்ச்சி தரும் நல்ல ஒளஷதம். நிம்மதியைக் கொடுக்கும் நல்லமுதம். வளர்ச்சியையும் எழுச்சியையும் வழங்கும் வற்றாத ஊற்று. அத்தகைய அரிய பயனை அடைய, உறக்கத்தை நோக்கிச் செல்கிறோம். உறக்கம் வரும் பொழுதுதான் படுக்க வேண்டும். படுத்தபிறகு உறங்கலாமா என்று யோசிப்பதும். படுத்துக் கொண்டே தூங்க முயற்சிப்பதும், அறிவீனமான செயலாகும்.

தூக்கமில்லாமல் படுத்திருக்கும் போது, பலப்பல நினைவுகள் அலைந்து வர நியாயமுண்டு. வீணாகிப்