பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

31


அந்தக் குழப்பத்திலிருந்து விடுபட, முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டு வர, நோயில்லாத உடலால் தான் முடியும்.

நோயில்லாமல் வாழ, பழம் பாடல் ஒன்று ஒரு பட்டியலையே தருகிறது. அந்தப் பாடலின் கருத்தை மட்டும் இங்கே தந்திருக்கிறேன்.

உணவிலே உள்ள கல்லினால் , மயிரினால், நெல்லினால், உமியினால்;

அதிகமான உணவை விரும்புவதால், உண்பதால், தானே எண்ணிக் கொள்கின்ற கவலையினால்; அதிகமான தூரம் நடந்து செல்வதால்;

இயற்கையின் அழைப்பான மலத்தையும், சலத்தையும் வெளியேற்றாமல் அடக்கிக் கொள்வதால்;

மிகவும் கனிந்த அழுகிய நிலையில் உள்ள பழங்களை, உண்ணுகின்ற காரணத்தால்;

பழசாகிப் போன (சமைத்த) பழைய காய்கறிகளை, சாதத்தை உண்ணுவதால்;

வயிறு நிறைய உண்ட பிறகு குளிப்பதனால்;

தூக்கம் இல்லாததால்; தூக்கம் குறைந்ததால்; தடை பட்டுப் போகின்ற தூக்கங்களால்;

நீரிலே அதிக நேரம் கிடப்பதால்;
பனிக்காற்றில் உடல் நலிவுற அலைவதால்;
உடல் உறவில் அதிகம் ஆசைப்பட்டு ஈடுபடுவதால்;
மலச்சிக்கல் ஏற்பட்டு முற்ற விடுவதால்;
அதிக சுமைகள் தூக்குவதால்;
காலை இளம் வெயிலில் உட்கார்ந்து வெயில் காய்வதால்;