பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உடல் களைத்துப் போகின்ற அளவுக்குக் கடுமையான வேலைகள் செய்வதால்;

இரவு நேரத்தில் பழந்தயிர், இஞ்சி, நெல்லி, பாகற்காய், பழங்கஞ்சி, போன்றவற்றை உண்ணலால் உடல் நலிவுற்று நோய் வருகிறது என்கிறது இந்தப்பழம் பாடலின் பட்டியல்.

நோய் வராமல் காக்கின்ற முன்னெச்சரிக்கை நிலையை நாம் பார்த்தோம். இன்னொரு புலவர். உடல் நலத்தை எவ்வாறு காப்பது என்பதற்கான பாட்டினையும் எழுதியிருக்கிறார்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழித்தல்.
வாரத்திற்கு இருமுறை எண்ணெய் நீராடல்.
மாதத்திற்கு இருமுறை உறவு கொள்ளுதல்.

வருடத்திற்கு இருமுறை வயிற்றழுக்கு நீக்க மருந்து சாப்பிடுதல்.

அத்துடன் முற்று தயிர், காய்ச்சிய பால், நீர்மோர். உருக்கிய நெய், இளநீர், இவற்றை அடிக்கடி உட்கொள்ளுதல், சாதம் உண்ட பிறகு தண்ணீர் குடித்தல், சாப்பிட்ட பிறகு கொஞ்சதூரம் காலாற நடத்தல் எல்லாம் சரீர சுகம் தரும் என்கிறார்.

ஆகவே, உடல் நலம் காக்கும் குறிப்புக்களை உணர்ந்து கொண்டு. அதனை உற்சாகமாகப் பின்பற்றி வந்தோமானால், உண்மையான வாழ்க்கையின் பயனை உய்க்கலாம். துய்க்கலாம். தொடர்ந்து சுகமாகவே வாழலாம்.

எனவே, நோயிலா வாழ்வுக்கு, வம்புக்கு இழுக்காத வாயும் வழியும் வேண்டும் என்பது இப்பொழுது புரிகிறதல்லவா!