பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


O குரூப் இரத்தம் உள்ளவர்களுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும். ஏனென்றால், இவர்களுடைய எச்சலில், வயிற்று உட்புறப் பகுதியைத் தடுத்துக் காக்கும் கெமிக்கல்ஸ் இல்லையென்பதால்தான் என்றும் காரணம் கூறுகின்றார்கள்.

சில சமயங்களில் அல்சர் வியாதி உள்ளவர்களின் உறவினர்களுக்கும் பொதுவாக வரும் என்றும் கூறுகின்றார்கள். இதை பரம்பரையாக வரும் நோய் என்றும் சிலர் குறிப்பிடுகின்றார்கள்.

அதிகமாக டீ காபி குடித்தல், அதிகமான கார உணவு வகைகளை உண்ணுதல், அஜீரணங்கள் உள்ளவர்களுக்கெல்லாம் அல்சர் உண்டாகி விடுகின்றது.

கவலையும் குழப்பமும்

கவலையும் குழப்பமும் ஒருவருக்கு எளிதாக அல்சரை உண்டு பண்ணிவிடுகின்றன.

மனசமாதானம் அற்றவர்கள் அடிக்கடி கொள்கின்ற பொறாமை உணர்வுகள், திருப்தியடையாத எரிச்சல், நிலைகள், மற்றும் தனக்குள்ளே ஏற்பட்டு விடுகின்ற குற்ற உணர்வுகள். மனசாட்சியின் உறுத்தல்கள், தனிமை நினைவுகள் தரும் தவிப்புகள், தாகங்கள் போன்றவை தான் அல்சருக்குத் தலையாய காரணங்களாகும்.

அடிக்கடி உணர்ச்சி வசப்படுவதால் இரத்தம் அதிகமாக விரைவு படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, குடலுள்ளே அதிக ஜீரண அமிலங்கள் சுரக்கப்படுகின்றன. அதுவே அகலாத வயிற்று வலியாக மாறி விடுகின்றன.