பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

41


எத்தனை வகைகள்?

மூன்று வகையாக அல்சரைப் பிரித்துக் காட்டுவார்கள். 1. ஜீரணம் நடைபெறுகின்ற இடத்தில் ஏற்படுகின்ற குடல்காய அல்சருக்கு பெப்டிக் அல்சர் (Peptic Ulcer) என்பது பெயர்.

2. வயிற்றுப் பகுதியில் வலி ஏற்படுத்தி விடுகிற அல்சருக்கு கேஸ்டிரிக் அல்சர் (Gastric Ulcer) என்பது பெயர்.

3. வயிற்றுப் பகுதிக்கும் கீழே உள்ள டியோடேனல் எனும் பகுதியில் ஏற்படுகின்ற அல்சருக்கு டியோடேனல் அல்சர் (Duodenal Ulcer) என்பது பெயர்.

இந்த மூன்று வகைகளிலும் கடுமையான பெப்டிக் அல்சர் என்பது இரத்தக் குழாய்களை பாதிப்பதுடன், குடலை துளைபோட்டுத் தொந்தரவு செய்கின்ற முறையிலும் முன்னேறி விடுகிறது. இதனை அலட்சியப்படுத்தி விடுவதும், தடுக்காமல் விட்டு விடுவதும், குணமாக்காமல் முற்ற விடுவதும், கடுமையான இரத்தப்போக்கு நேரக் காரணமாகி விடுவதுடன், சில சமயங்களில் அதிர்ச்சியினை உண்டாக்கி, மரணத்தையும் ஏற்படுத்தி விடுகின்ற அபாயத்தையும் உருவாக்கிவிடுகிறது.

எப்படி அறிவது?

அல்சர் தனக்கு வந்திருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது? நெஞ்செரிச்சல், உமிழ்நீர் வடிதல், ஒருவித