பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அமைதியின்மை மற்றும் வயிற்றில் வலி என்பது போன்ற உணர்வுகளைப் பார்த்து அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

சிலருக்கு வயிற்றுக்கு மேற்பகுதியில் அதாவது தொப்புளுக்கு அருகிலே பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொள்கின்ற அளவிலே வலி ஏற்படும் டியோடேனல் அல்சரினால் ஏற்படும் வலி இரவிலே அதிகமாகும். அதாவது இரவு உணவுக்கும் காலை சிற்றுண்டிக்கும் இடைப்பட்ட நேரத்திலே ஏற்படும் வலி அது. அது வயிறு காலியாக இருப்பதால் வரும் நோவாகும்.

கேஸ்டிரிக் அல்சர் தருகின்ற வலியானது, உணவு உண்ட பிறகு ஒடுங்கிப் போய்விடும்.

அல்சர் நோயாளிகள் சிலர், சாப்பாட்டிற்குப் பிறகு வலியிலிருந்து நிவாரணம் பெற்றது போல் உணர்வார்கள். ஆனால், சிறிது நேரம் கழித்து அஜீரணம் போன்ற உணர்வும், வயிறு கனப்பது போலவும், வாயு தொந்தரவால் அவதிப்படுவது போலவும். உணர்வுகள் அதே சமயத்தில் கடுமையான முதுகுவலி இருப்பதையும் அறிவார்கள்.

குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுப்பதும் அவர்கள் அல்சருக்கு ஆளானதாக அறிவிக்கும் மெய்ப்பாடுகளாகும்.

அல்சர் கடுமையானதாக இருந்தால், அது வாந்தியை உண்டாக்கும் மலத்துடன் இரத்தப் போக்கும் இருக்கும் மலமோ இறுகி தார் போன்று கருப்பு நிறத்துடன் காணப்படும்.