பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

43


அவசர நிவாரணம்

உடனே உபாதையிலிருந்து நிவாரணம் பெற இரண்டு பிஸ்கட் துண்டுகள் சாப்பிட்டு தண்ணீர் குடிக்கலாம். பால் ஒரு டம்ளர் குடிக்கலாம். அதாவது வயிறு காலியாகாமல் இருப்பதுபோல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மருந்து சாப்பிட்டுத் தீர்க்க வேண்டும் என்ற நிலை வரும் போது. மெக்னேஷியம் மிக்சர், அல்லது அலுமினியம் காம்பவுண்ட்ஸ் இவைகள் அடங்கிய மருந்துகள் பல பெயர்களில் கிடைக்கும், மருத்துவர்கள் அறிவுரைக்குப் பிறகு பெற்று பயன் பெறலாம்.

மருந்துக்கு முன்னால், நாம் உண்ணும் உணவினை செம்மைபடுத்திக் கொண்டால், அல்சரின் அபாயத்திலிருந்து ஆரோக்கியமாகித் தப்பித்துக் கொள்ளலாம்.

குணம் தரும் உணவு

வயிற்றுக்கு வலி தராமல், எரிச்சல் உணர்வினைத் தராமல் இதமாக்கி சுகம் தரும் உணவு வகைகளையே சாப்பிட வேண்டும். அல்சரைக் குணமாக்கும் உணவு வகை; காய்ச்சிய பால், பாலேடு, பாலாடைக்கட்டி, வெண்ணெய், வாழைப்பழம் போன்றவை.

எல்லா வகையான வேகவைத்த காய்கறிகள். அவித்த முட்டை, வேகவைத்த உருளைக்கிழங்கு, பழுத்த வாழைப் பழங்கள் சாப்பிட்டால் வயிற்றுக்கு இதமாக இருக்கும். இவை ஒரு தொந்தரவும் தராது.

கீழ்க்காணும் உணவுமுறை, அல்சரைக் கடுமையாக்கி விடும். மதுபான குடிகள், காபி வகைகள், சிகரெட், பீடி, சுருட்டுப் புகைத்தல், கார உணவுகள் மற்றும்