பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கொழுப்புப் பதார்த்தங்கள் எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவைகளாகும்.

சில அறிவுரைகள்

அல்சரைக் குணமாக்கவும், அவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் உதவுகின்ற மூன்று முறைகள் உள்ளன.

1. ஓய்வு 2 . உணவுமுறை 3. மருந்து வகை, மருந்துகள் வயிற்றுத் தசைகளை விறைப்புத் தன்மையிலிருந்து தளர்த்தவும், சில மருந்துகள் அல்சரை மிதப்படுத்தவும் மற்றும் அமில ஊற்றினை சமநிலைப்படுத்தவும் உதவுகின்றன.

அவற்றினைத் தவிர்த்திட நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். நாம் உண்ணுகின்ற உணவானது வயிற்றில் எச்சிலையும் பரபரப்பையும் உண்டு பண்ணாதனவாக இருக்கவேண்டும்.

அதில் சிறந்த குறிப்பானது நாம் நமது வாழ்க்கை முறையை சிறந்த முறையில் மாற்றியமைத்துக் கொள்வதுதான் அறிவான வழியாகும். 1. அவசரப்படுதல் (Hurry) கவலைப்படுதல் (Worry) கறிவகைகள் (Curry) இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2. மனதுக்குள்ளேயே கவலைப் படுவதைத் தவிர்த்து விட்டு, மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழவேண்டும்.

3. விரும்பிய வேலையை விடாது செய்து வர வேண்டும். அதிகமாக செய்தால் கூட அது தொந்தரவு தராது, என்பதால் பசிக்க உழைக்க வேண்டும்.